FDI inflow Increase: ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய நேரடி முதலீடு பெற்ற இந்தியா அசத்தல்
இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு:
இந்தியா 2021- 2022 ஆம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார். 2021-22 ஆம் நிதியாண்டில், 6.31 லட்சம் கோடிக்கு அதிகாமாக அந்நிய நேரடி இந்தியா பெற்றுள்ளதாக சோம் பிரகாஷ் தெரிவித்தார்.
India received highest ever FDI inflow of over Rs 6 crore in FY 2021-22
— ANI Digital (@ani_digital) July 29, 2022
Read @ANI Story | https://t.co/XzCKyhvPsj#FDI #CommerceMinistry #ForeignDirectInvestment pic.twitter.com/tav7CUFq9M
உற்பத்தி துறை:
2020-21 ஆம் நிதியாண்டில், உற்பத்தி துறையில் 89, 766 கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடானது, 2021-22 ஆம் நிதியாண்டில் 1,58, 332 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த அளவானது, உற்பத்தி துறையில் 76 சதவீதமாகவும்.
அந்நிய நேரடி முதலீடு
அந்நிய நேரடி முதலீடு என்பது வெளிநாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், பிற நாட்டின் பொருளாதரத்தில் முதலீடு செய்வதாகும். அந்நிய நேரடி முதலீடானது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றிமையுள்ளதாக உள்ளது. இந்நிலையில் இதன் அளவானது, இந்தியாவில் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகள்:
அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி துறையில் சில நிறுவனங்கள் 100 சதவீத முதலீட்டுக்கு அனுமதி, முதலீட்டாளர்களுக்கான அனுமதி வழிமுறைகளில் எளிமையாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளாலும். ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையின் நடவடிக்கையாலும் அந்நிய நேரடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்