மேலும் அறிய

UPI now, pay later: பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லாமலே இனி UPI பேமண்ட் பண்ணலாம்.. எப்படி தெரியுமா?

யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக HDFC மற்றும் ICICI வங்கிகள் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக HDFC மற்றும் ICICI வங்கிகள் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

யுபிஐ பரிவர்த்தனை:

இன்றைக்கு அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கிறது. இதற்கேற்றவாறு அனைத்து துறைகளும் ஸ்மார்ட் ஆன வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியும் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் UPI முறையை என்.சி.பி.ஐ. தொடங்கியது.

ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. மத்திய அரசும், வங்கிகளும் பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு திட்டத்தை HDFC மற்றும் ICICI வங்கிகள் அறிமுகம் செய்துள்ளது. 

அப்படி என்ன ஸ்பெஷல்?

அதன்படி இனி உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லையென்றாலும் நீங்கள் விரும்பும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி  UPI பயனர்களுக்கு  credit line facility எனப்படும் கடன் வழங்கும் வசதியை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த வசதி வாடிக்கையாளரின் அனுமதியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தும் வகையில் UPI Now Pay Later என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

HDFC வங்கியில் இந்த வசதியை செயல்படுத்தும் போது முதல்முறை செயல் கட்டணமாக ரூ. 149 செலுத்த வேண்டும். அதில் வங்கி உங்களுக்காக ஒரு கணக்கைத் திறந்து, உங்கள் டெபிட் கார்டை அதனுடன் இணைக்கும். பிறகு, இந்த "Pay Later" கணக்கை உங்களுக்கு விருப்பமான UPI செயலியுடன் இணைக்க வேண்டும்.

HDFC  வங்கி மற்றும் ICICI வங்கி இரண்டும் ஒரு பயனருக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அதிகப்பட்சம் ரூ.50,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடன் வரம்பு வருமானம், செலவு முறைகள் மற்றும் முந்தைய கடன் செயல்முறை ஆகியவற்றை பொறுத்து ஒரு வாடிக்கையாளருக்கு மற்றொரு வாடிக்கையாளருக்கு வேறுபடலாம். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மற்ற வங்கிகளும் விரைவில் இத்திட்டத்தில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget