மேலும் அறிய

Gold Rate: அம்மாடியோவ்..! 59 ஆயிரம் ருபாயை நெருங்கும் தங்கம் விலை, கிராம் எவ்வளவு? வெள்ளி நிலவரம் என்ன?

Gold silver rate: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து, சவரன் 59 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

Gold silver rate: சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, பொதுமக்களிடையே பேரிடியாக இறங்கியுள்ளது. குறிப்பாக வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுவதால், திருமணம் போன்ற சுபகாரியங்களை திட்டமிட்டு இருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்க, செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி என சேர்த்து ஒரு சவரன் விலையே 63 ஆயிரம் ரூபாயை நெருங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முதலீட்டில் சிக்கல்:

இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு தங்கமே மிகவும் எளிதான முதலீடாக உள்ளது. ஆனால், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் விலையால், தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. பங்குச் சந்தையில் தொடர்ந்து நிலவும் வீழ்ச்சி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.220 அதிகரித்துள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் வெள்ளி விலை:

தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
Embed widget