மேலும் அறிய

Gold, Silver Price : சவரனுக்கு ரூ.448 அதிகரித்தது தங்கம்! மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனை..!

Gold Silver Rrate Today in Chennai: சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 448 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 136க்கு விற்கப்படுகிறது.

Gold Silver Price Today: சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 336க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 34 ஆயிரத்து 688க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல்நாளான இன்று சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிராமிற்கு தங்கம் ரூபாய் 56 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 392க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் 448 அதிகரித்து ரூபாய் 35 ஆயிரத்து 136க்கு விற்கப்படுகிறது.

சவரன் தங்கம் மீண்டும் 35 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 756க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 48க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 63.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 63 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.


Gold, Silver Price : சவரனுக்கு ரூ.448 அதிகரித்தது தங்கம்! மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனை..!

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


Gold, Silver Price : சவரனுக்கு ரூ.448 அதிகரித்தது தங்கம்! மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனை..!

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Bank Working Days: வங்கிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறையா? - மத்திய அரசு மறுப்பு.. என்ன நடந்தது?
Bank Working Days: வங்கிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறையா? - மத்திய அரசு மறுப்பு.. என்ன நடந்தது?
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
October Rule Changes: ஏடிஎம் சேவை முதல் சிலிண்டர் பெறுவது வரை.. அக்டோபரில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. நோட் பண்ணுங்க!
October Rule Changes: ஏடிஎம் சேவை முதல் சிலிண்டர் பெறுவது வரை.. அக்டோபரில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget