Gold, Silver Price: வாரத்தின் தொடக்கத்திலேயே விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; எவ்வளவுன்னு தெரியுமா?
Gold, Silver Price-5,Septembe: இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் இதுதான்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ரூ.37,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 14 உயர்ந்து ரூ.4,736 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து. ரூ.58. 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்க ஆபரணங்கள்
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. ,இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ் ஜி பி தங்க பத்திர முதலீடானது,நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் கிளைகளுக்கு சென்று,உங்கள் கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி வாங்க முடியும்.இதே போலவே நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனையை வைத்திருந்தீர்களேயானால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வாங்க முடியும்.
ஆன்லைனில் எவ்வாறு வாங்குவது என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகளின் மூலம் நீங்கள் தெரிந்து உங்கள் தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்கலாம்.
இதன் படி 1: உங்கள் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழையவும். ஆன்லைனில் முதலீடு செய்யும் தனிநபர்கள் தங்கள் வங்கி வழங்கும் நெட் பேங்கிங்கில் செல்லுபடியாகும் உள்நுழைவு ஐடி அணுகலைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு தனிநபரிடம் உள்நுழைவு ஐடி இல்லை என்றால், மேலும் தொடர அதை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அவசியம்.
2: இப்படி உங்கள் வங்கி கணக்கில் ஐடியை பெற்று உள்நுழைந்த பிறகு, பிரதான மெனுவிலிருந்து 'இ-சேவை' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'சவர்யன் தங்கப் பத்திரம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3: முதலில் வருபவர்கள் 'பதிவு' என்பதைத் தேர்ந்தெடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' சரிபார்த்து, பின்னர் 'தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4: SGB திட்
டத்திற்கான தேவையான விவரங்கள் முதலீட்டாளரின் டிமேட் கணக்கை வழங்கும் NSDL அல்லது CDSL இலிருந்து டெபாசிட்டரி பங்கேற்பாளரின் விவரங்களுடன் உள்ளிடப்பட வேண்டும்.
5: பதிவு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
6: பதிவு முடிந்ததும், முதலீட்டாளர் தலைப்பில் இருந்து வாங்கும் விருப்பத்தை தேர்ந்தெடுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பதிவு செய்யும் செயல்முறையைத் தவிர்த்துவிட்டு, தலைப்பில் இருந்து நேரடியாக 'வாங்குதல்' என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
7: புதிய பக்கத்தில், சந்தா அளவு மற்றும் நாமினி விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
படி 8: இறுதியாக, முதலீட்டாளர் தனது மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.
இப்படி வாங்கப்படும் தங்க பத்திரமானது தங்கத்தின் அதே மதிப்பை கொண்டிருப்பதோடு, ஒவ்வொரு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பொறுத்த அளவில், வருடாந்திர வட்டி அல்லது ஆறாண்டுகள் அல்லது எட்ட ஆண்டுகளில் வட்டியோடு சேர்த்து முதிர்வுத் தொகை என கிடைக்கிறது. இதே போலவே இந்த திட்டமானது எட்டு வருட கால முதலீடு தன்மையுடன் கிடைக்கிறது.