மேலும் அறிய

Gold Rate Reduced 22nd Oct.: உடனே கிளம்புங்க.! இன்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை - தற்போதைய விலை என்ன.?

நேற்று மாலை தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 3,680 ரூபாய் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, ஒரு லட்சம் ரூபாயை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை கணிசமாக விலை குறைந்தது. இந்நிலையில், இன்று காலை அதிரடியாக சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் 1,280 ரூபாய் விலை குறைந்து ஒரே நாளில் மொத்தமாக 3,680 ரூபாய் விலை குறைந்து, மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்று(22.10.25) ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் மாற்றங்களை கண்டு வருகிறது. தினம் தினம் உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மாலை முதல் அதிரடியாக விலை குறைந்து வருகிறது.

நேற்‘று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 2 ஆயிரத்து 80 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சி அளித்தது. அதன்படி, கிராமிற்கு 260 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 12,180 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், சவரனுக்கு 2,080 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 97,440 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று மாலையே சவரனுக்கு 1,440 ரூபாய் விலை குறைந்தது மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 180 ரூபாய் குறைந்து, கிராம் சரியாக 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் சரியாக 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த சூழலில், இன்று(22.10.25) ஒரே நாளில் சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்து அசத்தியுள்ளது. அதன்படி, இன்று காலை கிராமிற்கு 300 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று மாலையில் மேலும் அதிரடியாக கிராமிற்கு 160 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 11,540 ருபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வழக்கமாக மக்களுக்கு அதிர்ச்சியை மட்டுமே வழங்கும் தங்கம், ஒரே நாளில் இந்த அளவிற்கு விலை குறைந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

வெள்ளி விலையும் குறைந்தது

இந்த நிலையில், வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலையில் 2 ரூபாய் குறைந்த  வெள்ளியின் விலை, மாலையில் மேலும் 6 ரூபாய் என மொத்தமாக நேற்று 8 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து முந்தைய நாள் விலையான 190 ரூபாயில் இருந்து 188 ரூபாயாக விற்கப்பட்டது. இந்நிலையில், மாலையில் கிராமிற்கு மீண்டும் 6 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், இன்றும் வெள்ளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 7 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 175 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலைகள் போட்டி போட்டு உயர்ந்த நிலையில், தற்போது அதே பாணியில் குறைவது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தொடர்ந்து விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget