மேலும் அறிய

GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று காலை மற்றும் பிற்பகல் என 2 முறை 7,600 ரூபாய் விலை குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்கத்தின் விலை எப்போது குறையும் என காத்திருந்த மக்களுக்கு, ஜாக்பாட் அடித்தது. ஆம், ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையானது சரிந்து வந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது. இதனால் நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

தங்கம் விலை குறைந்தது எதனால்.?

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளாமல், கச்சா எண்ணெய் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதால், தங்கம் விலையானது சரிந்ததாக கூறப்படுகிறது.  மேலும், போர் தொடர்ந்தால் இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை சரிய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை.
  • பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 19- சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 20- சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 21- ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து 1,08,960 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை 

இருமுறை குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது. அதன்படி, இன்று ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. மொத்தமாக இன்று காலை மற்றும் பிற்பகலில் விலை குறைந்து, ஒரே நாளில் கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 12,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து, ஒரு சரவன் 1,01,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

மாலையில் ட்விஸ்ட் அடித்த தங்கம் விலை - அதிரடி உயர்வு

இந்த சூழலில், மாலையில் திடீரென தங்கத்தின் விலை பெரும் அளவில் உயர்ந்தது. அதன்படி, மாலையில் கிராமிற்கு 670 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,340 ரூபாய்க்கு எகிறியது. சவரனுக்கு 5,360 ரூபாய் அதிகரித்து, 1,06,720 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

அமெரிக்கா இஸ்ரேல்  - ஈரான் போரால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று மாலையில் திடீரென ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால், தங்கத்தின் விலை திடீரென மாலையில் உயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அடுத்து வரும் நாட்களிலும் விலை உயர்வு இருக்குமோ என்று பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று மாலையில் கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று காலையில் கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் 15 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget