மேலும் அறிய

Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து, சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்று இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்துள்ளது.

மாறி மாறி ஆட்டம் காட்டும் தங்கத்தின் விலை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொடங்கிய 7-ம் தேதி, தங்கத்தின் விலை கிராம் 9,075 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,600 ரூபாயாகவும் இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளான 8-ம் தேதி சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்தது. அதன்படி, ஒரு கிராம் 9,130 ரூபாயாகவும், ஒரு சவரன் 73,040 ரூபாயாகவும் இருந்தது.

பின்னர், 9-ம் தேதி கிராமிற்கு 115 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 9,015 ரூபாயாகவும், சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, 10-ம் தேதி கிராமிற்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,045 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதைத் தொடர்ந்து, 11-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 12-ம் தேதியான நேற்று காலை, மாலை என இரு வேளைகளிலும், 2,360 ரூபாய் குறைந்தது. அதன்படி, நேற்று காலை கிராமிற்கு 165 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,880 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 71,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாலையில், கிராமிற்கு மேலும் 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி, சவரனுக்கு மேலும், 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 70,000 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,765 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 70,120 ரூபாயாக விற்கப்பட்டது.

இன்று மாலையில், கிராமிற்கு மேலும் 90 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,855 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 70,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மொத்தத்தில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாயும், சவரனுக்கு 840 ரூபாயும் உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. இப்படி, ஒவ்வொரு நாளும் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் தங்கத்தின் விலையால், பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு ரூபாய் குறைந்த வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கடந்த 8ம் தேதியிலிருந்து கிராம் 110 ரூபாயாக இருந்துவந்த நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்து 109 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget