Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
தங்கம் விலை, புத்தாண்டுக்கு குறைவது போல் குறைந்து, இன்று ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்ந்து, மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சயடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, புத்தாண்டுக்கு முந்தைய 2 நாட்கள் அதிரடியாக குறைந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வந்தது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 1,120 ரூபாய் விலை உயர்ந்து, சவரன் மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
புத்தாண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வந்த தங்கம்
தங்கத்தின் விலை தினமும் அதிர்ச்சி கொடுத்துவந்த நிலையில், புத்தாண்டை ஒட்டி விலை குறைந்தது. ஆனால், தற்போது விலை உயர்ந்து, மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 29-ம் தேதி, ஒரு கிராம் விலை குறைந்து 13,020 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 1,04,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 30-ம் தேதி ஒரே நாளில், அதிரடியாக 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வருடத்தின் கடைசி நாளான 31-ம் தேதி அன்று, இருமுறை விலை குறைந்து, தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் வந்தது.
அதன்படி, 31-ம் தேதி காலை தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்து 1,00,400 ரூபாயாக விற்பனையானது.
இந்நிலையில், மாலையில் தங்கம் கிராமிற்கு மேலும் 70 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 560 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, புத்தாண்டு தினத்தில், அதாவது 1-ம் தேதி மேலும் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 12,440 ரூபாயாகவும், ஒரு சவரன் 99,520 ரூபாயாகவும் விற்பனை ஆனது. இந்நிலையில், 2-ம் தேதியான இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்து, மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
அதன்படி, இன்று காலையிலேயே தங்கம் விலை கிராமிற்கு அதிரடியாக 140 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,580 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,00,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்வு
இதேபோல், வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 29-ம் தேதி கிராமிற்கு 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனையானது.
தொடர்ந்து, 30-ம் தேதி, வெள்ளி விலை அதிரடியாக கிராமிற்கு 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடத்தின் இறுதி நாளான 31-ம் தேதி, மேலும் ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 257 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பின்னர், 1-ம் தேதியான நேற்று மேலும் ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 256 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 4 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை தற்பேது 260 ரூபாய்க்கு சென்றுள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது, மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.





















