மேலும் அறிய

Gold Rate Today Jan.28th: இது உனக்கே அடுக்குமா.?! இன்று ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்த தங்கம் விலை; ஒன்றேகால் லட்சத்தை நெருங்கியது

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒன்றேகால் லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையும் கிராம் 400 ரூபாய்க்கு எகிறியுள்ளது. தற்போதைய விலையை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை இன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு முறை தலா 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து, ஒரே நாளில் சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ஒன்றேகால் லட்சம் ரூபாயை நெருங்கி, தாய்மார்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்து, கிராம் 400 ரூபாயை தொட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலையை இப்போது பார்க்கலாம்.

ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்த தங்கம் விலை - புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கிராம் 14,750 ரூபாய்க்கும், சவரன் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வாரத்தில் முதல் நாளிலேயே, அதாவது குடியரசு தினமான 26-ம் தேதி சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதன்படி, ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாயை கடந்து, 15,025 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து, 27-ம் தேதியான நேற்று சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், இன்று காலை மற்றும் பிற்பகலில் என இரண்டு முறை, தலா 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து, ஒரு சவரன் ஒன்றேகால் லட்சத்தை நெருங்கியுள்ளது.

அதன்படி, இன்று காலை கிராம் 370 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,960 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் கிராமிற்கு 280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,610 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ரூ.400-ஐ எட்டியது

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் 400 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில், வெள்ளி ஒரு கிராம் 365 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், திங்கட் கிழமை, அதாவது 26-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 375 ரூபாய்க்கு சென்றது.

தொடர்ந்து, 27-ம் தேதியான நேற்றும் கிராமிற்கு 12 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 387 ரூபாய்க்கு சென்றது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளி விலை 13 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 400 ரூபாயை தொட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முகூர்த்த நாள் வேறு நெருங்குவதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget