மேலும் அறிய

Gold Rate: அதிர்ச்சியில் மக்கள்:.. 44 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; புதிய உச்சத்தை தொட்டது. இதுதான் விலை நிலவரம்!

Gold Silver Price : 44 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை. அதிர்ச்சியில் மக்கள்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
 
தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலை நேர நிலவரப்படி,  சவரனுக்கு ரூ.480 விலை உயர்ந்த நிலை இன்று மாலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040 ஆக விற்பனையாகி வருகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,505-ஆக விற்பனையாகிறது. ஒரே நாளில் 720 ரூபாய் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 46,936 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,867 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை ரூ.1. 80 காசுகள் உயர்ந்து ரூ.77.80 ஆக  விற்பனையாகிறது.  வெள்ளி ஒரு கிலோ ரூ.7 ஆக 77,800 விற்பனையாகிறது.

Gold Rate: அதிர்ச்சியில் மக்கள்:.. 44 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; புதிய உச்சத்தை தொட்டது. இதுதான் விலை நிலவரம்!

காலை விலை நிலவரம் : 

பட்ஜெட் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800 ஆகவும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475ஆக விற்பனையானது. 

நேற்று ரூ77 உயர்வு:

இதேபோல் நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 22 எனவும், மதியம் கிராமுக்கு ரூ.55 எனவும் மொத்தம் 77 ரூபாய் உயர்ந்தது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் இறக்குமதி செய்ய வரி அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவாக தங்கத்தின் விலை வராலாறு காணத அளவிற்கு உயர்ந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு நேற்று 43 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை. இந்நிலையில், இன்று 44 ஆயிரமாக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2020 ஆண்டு முதன் முதலாக தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை எட்டியது. ஆகஸ்ட்,7, 2022 அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 43,360 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தங்க ஆபரணங்கள்:

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.

அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.

தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள்:.. 44 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; புதிய உச்சத்தை தொட்டது. இதுதான் விலை நிலவரம்!

தங்க சேமிப்பு திட்டங்கள் : 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம். 

  • தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 
  • தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Embed widget