மேலும் அறிய

Bank Working Days: வங்கிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறையா? - மத்திய அரசு மறுப்பு.. என்ன நடந்தது?

இந்திய ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி,மத்திய அரசு அலுவலகங்கள்,  பங்குச் சந்தைகள்  ஆகியவை ஏற்கனவே வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் நிலையில் தங்களுக்கும் அதே பணிச்சூழல் மற்றும் சமநிலையான வாழ்க்கை வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்ததாக வெளியான தகவல் வதந்தி என மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

வங்கி ஊழியர்கள் போராட்டம் 

நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பது இதுவரை அமலில் இருந்து வந்தது. ஆனால் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலைநாள்களாக அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாளைக் குறைக்கும்போது தினமும் 40 முதல் 50 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய ஊழியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி,மத்திய அரசு அலுவலகங்கள்,  பங்குச் சந்தைகள்  ஆகியவை ஏற்கனவே வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் நிலையில் தங்களுக்கும் அதே பணிச்சூழல் மற்றும் சமநிலையான வாழ்க்கை வேண்டும் என்பது வங்கி ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. 

தற்போதைய காலத்தில்  UPI, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் மற்றும் ATM சேவைகள் மிகவும் வலுவாகவும், அதிக பேரால் பயன்படுத்தப்படுவதாலும் பொதுமக்களின் வழக்கமான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்படாது என்பது அவர்களின் வாதமாக இருந்து வந்தது. இதனையெல்லாம் வலியுறுத்தி செப்டம்பர் 28ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று வழிகளை ஆராய தற்போது ஒரு உயர்மட்டக் கூட்டுக்குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இனி 5 நாட்கள் மட்டுமே வேலை

இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய நிதியமைச்சகம் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவித்ததாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் இதனை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
மதுரை மக்களே உங்களின் முதல் தலைவலிக்கு ஒரு நிவாரணம்... இந்த ஏரியாவில் டிராபிக் குறையப்போகிறது !
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Embed widget