Paytm: பேடிஎம்முக்கு விதித்த கட்டுப்பாடுகள்! பிஎஃப் பணத்தை எடுப்பதில் சிக்கல் - ஆப்பு வைத்த EPFO!
பேடிஎம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Paytm: பேடிஎம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவது, டிக்கெட் புக் செய்வது, ரீசார்ஜ்கள் என அனைத்திற்குமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு விகிக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
EPFO சொன்னது என்ன?
இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பலரும் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருக்கும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, பேடிஎம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிப்ரவரி 8ஆம் தேதி அனைத்து கள அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஆகிய வங்கிகளின் வங்கிக் கணக்குளில் EPF க்ளெய்ம் (EPF Claim) செய்வதற்கு நவம்பர் 1ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரி 31ஆம் தேதி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வங்கி கணக்கில் EPF க்ளெம்களை (EPF Claim) வாடிக்கையாளர்களுக்கு செட்டில் செய்ய வேண்டாம்” என்று EPFO அனைத்து கள அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
பேடிஎம் பேமெண்ட் வங்கியில் விதிகள் சில மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, பேடிஎம் பேமன்ட் வங்கியில் பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35A மற்றும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி Paytm Payments வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாலட் உள்பட எந்த பண பரிமாற்றங்களும் அனுமதிக்கப்படாது. ஆனால், பேடிஎம் கணக்குகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை திரும்ப எடுக்கவும் பயன்படுத்தவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பணப் பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது .
ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.