மேலும் அறிய

Diwali Muhurat Trading 2023: அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: நேரத்தை அறிவித்த தேசிய பங்குச்சந்தை

இதன்படி நவம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Diwali Muhurat Trading 2023:

பங்குச் சந்தையில் தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரத்தை தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகூர்த்த வர்த்தகம் என்பது இந்தியாவில்  தீபாவளியன்று நடைபெறும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். அதில், பங்குச் சந்தைகள் குறுகிய காலத்திற்கு வர்த்தகமாகும். இதன்படி,  மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த வர்த்தகம் நடைபெற உள்ளது. ப்ரீ ஓப்பன் செஷனாக 8 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.08 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும். 

வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும்.   

அது என்ன முகூர்த்த வர்த்தகம்?  (Muhurat Trading)

தீபாவளி அன்று நடத்தப்படும் வர்த்தகமே முகூர்த்த வர்த்தகம் ஆகும். பங்குச் சந்தை விடுமுறை நாளில் மூடப்பட்டிருக்கும் நிலையில், முகூர்த்த வர்த்தகத்தில் சிறப்பு ஒரு மணி நேரம் மட்டும் திறந்திருக்கும். இந்த சிறப்பு வர்த்தகத்தின் மூலம் அதிர்ஷ்டமும் லாபமும் பெருகும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

அதே வகையில் 2018 முதல், முகூர்த்த வர்த்தகம் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. 2022-ல் பங்குச்சந்தை புள்ளிகள் 0.88 சதவீதம் உயர்ந்தன. 2021ஆம் ஆண்டில், பங்குச் சந்தை 0.49 சதவீதம் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. 2020 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மும்பை பங்குச் சந்தை benchmark index முறையே 0.45 சதவீதமும் 0.49 சதவீதமும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

முகூர்த்த வர்த்தகம் தொடங்கியது எப்படி? (Diwali Muhurat Trading)

பழங்கால இந்தியாவில் அரசன் விக்கிரமாதித்தன், முகூர்த்த வர்த்தகத்தைத் தொடங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் 1957-ல் மும்பை பங்குச் சந்தை இந்த வழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 1992ஆம் ஆண்டு இந்த பழக்கத்தைத் தொடங்கியது. தற்காலத்தில் முதலீட்டாளர்கள் முகூர்த்த வர்த்தக நாளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget