Share Market Closing Bell: வர்த்தக நேர முடிவில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 96 புள்ளிகள், நிஃப்டி 50 புள்ளிகள் !
இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் சற்று பதற்றமான நிலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவைகள் உள்ளூர் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95.71 அல்லது 0.16% புள்ளிகள் உயர்ந்து 59,202.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 51.70 அல்லது 0.30% புள்ளிகள் உயர்ந்து 17,563.95 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குகள் சற்று சரிவுடன் வர்த்தகமாகின. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி பாசிடிவாக நிறைவடைந்தது.
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
வர்த்தக நேர முடிவில் வினாதி ஆர்கானிஸ், யூ.பி.எல். லிமிடெட், காவேரி சீட் நிறுவனம், வர்தமான் டெக்ஸ்டைல்ஸ், தானி சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்தில் விற்பனையாகின.
ஹெச்.சி.எல். டெக், டெக் எம், பவர்கிரிட், டி.சி.எஸ். பஜாஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி. நெஸ்லே இந்தியா, டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஒன்றிலிருந்து இரண்டு சதவீதத்திற்குள் வர்தமாகின.
ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப். சி, வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, உள்ளிட்டவைகளின் பங்குகள் 0.5 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை சரிவுடன் வர்த்தகமாகின.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஒன்பதாண்டு கால வரலாற்று இன்று இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் 83.2150 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஃபார்மா துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. சன் ஃபார்மா அட்வான்ஸ்ட் ஆராய்ச்சி நிறுவனம், சிப்லா, எஃப்.டி. சி. நிறுவனம் உள்ளிட்டவைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
வங்கித் துறை சரிவுடன் வணிகமாகின. கனரா வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சரிவுடன் விற்பனையாகின.