மேலும் அறிய

petrol Diesel price: தொடர்ந்து குறையாத பெட்ரோல், டீசல்... காரணம் இது தான்!

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 42வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை:  

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை  கணிசமாக சரியத் தொடங்கியுள்ள போதிலும், இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமல்  இருந்து வருகிறது. 

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் ஒபெக்+ எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று  எதர்பார்க்கப்படுகிறது. 

petrol Diesel price: தொடர்ந்து குறையாத பெட்ரோல், டீசல்... காரணம் இது தான்!
நடப்பு நிதியாண்டில் வெறும் 7 முறை தான் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவில் 8% குறைந்த நிலையிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமல் வருகிறது. முன்னதாக, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தர்மபுரி எம்.பி செந்தில்குமார், "

எண்ணெயை சந்தைபடுத்தும் நிறுவனங்களுக்கு லாபத்தில் இயங்கிகொண்டிருகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகஸ்தர்களின் நிலை மோசமாகி வருகிறது. 40 மாதங்களுக்கு மேலாக அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனைக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆகையால் இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அபூர்வா சந்திரா குழுவின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். 

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. 

முன்னதாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை மட்டுப்படுத்த சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 50 மில்லியன் மெட்ரிக் டன்களை சந்தையில் விற்கப்போவதாக அமெரிக்கா  அறிவித்தது. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் 3வது பெரிய நாடான இந்தியாவும் தன் பங்குக்கு தன் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள 5 மில்லியன் மெட்ரிக் டன்களை வெளியிடுவது குறித்து கலந்தாடி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
முதல் குழந்தை பெத்துக்கிட்டா 5K.. இரண்டாவது குழந்தைக்கு 6K.. பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக!
கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000.. பெண்கள்தான் டார்கெட்.. அள்ளி கொடுக்கும் பாஜக!
Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AQI Index :  சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
முதல் குழந்தை பெத்துக்கிட்டா 5K.. இரண்டாவது குழந்தைக்கு 6K.. பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக!
கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000.. பெண்கள்தான் டார்கெட்.. அள்ளி கொடுக்கும் பாஜக!
Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான தகவல்!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Power Shutdown: அலாட் ஆகிடுங்க மக்களே... நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது...!
Power Shutdown: அலாட் ஆகிடுங்க மக்களே... நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது...!
Embed widget