Budget 2025: பழைய வருமான வரி முறை ரத்தாகிறதா? நிலவரம் என்ன?
Income Tax Old Tax Regime: 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய வருமான வரி முறை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வருமான பெறுவோருக்கு பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். புதிய வருமனா வரி முறையின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனர். இது பழைய வருமான வரி முறை நீக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வருமான வரி பிரிவில் உள்ளவை புதிய வருமான வரி முறையை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
2 லட்ச ரூபாய் வரை - வரி விலக்கு:
மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பாக 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய வரி விதிப்பு முறையில் 8 முதல் 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ரூ. 75,000 நிலையான வரி விலக்குடன் சேர்த்து, இனி ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை.
வருவான வரி புதிய முறை:
- ரூ. 0- 4 லட்சம் வரை - வரி இல்லை
- ரூ.4 முதல் 8 லட்சம் - 5% வரி
- ரூ.8 முதல் 12 லட்சம் - 10%
- ரூ.12 - 16 லட்சம் - 15%
- ரூ.16 - 20 லட்சம் - 20%
- ரூ.20 - 24 லட்சம் - 25%
- ரூ.24 லட்சத்துக்குக் கூடுதலாக - 30% வரி விதிக்கப்படும்.
இதில் ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை வாங்குவோருக்கு 10 சதவித வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் அதில் 10 சதவீதம் 1.2 லட்சம் தொகையை வரியாக செலுத்தத் தேவையில்லை. எனினும் புதிய வரி விதிப்பு முறையில் 8 முதல் 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதை பற்றி விரிவாக அறிய.. 80 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு
பழைய வருமான வரி முறை (Income Tax - Old Tax Regime):
புதிய வரி முறை (New tax regime), பழைய நடைமுறை என இரண்டும் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், பழைய முறையை சிலர் தேர்ந்தெடுக்க காரணம். வருமான வரி பிரிவுகள் 80C, 80D ஆகியவற்றை பயன்படுத்தின் விலக்கு பெற முடியும். வருமான வரிச் சட்டத்தின் 80சி-ன் [படி ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள்,பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற பிற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். அதேபோல பிரிவு 80D, குடும்பம் மற்றும் பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளில் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கான விலக்கும் அனுமதிக்கிறது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2020-21 நிதியாண்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரியில் புதிய நடைமுறையை அறிவித்தது. அப்போது பலரும் பழைய வருமான் வரி முறையை தேர்வு செய்தனர். அதன் மூலம் அவர்களுக்கு வரி விலக்கு கிடைத்தது. அதன் பிறகு அரசு புதிய வருமான வரி முறையை வழக்கமான ஒன்றாக மாற்றியது. வருமான வரி செலுத்துவோர் பழைய முறையை தேர்வு தனி நடைமுறையை கொண்டுவந்தது. அதாவது, ஒரு முறை புதிய வரி விகித முறையே தேர்வு செய்துவிட்டால், பழைய வரி விகிப்பு முறைக்கு மாற முடியாது.
புதிய வரி விதிப்பு முறையின் மீது அரசாங்கத்தின் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது, அதைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையில் வரி விலக்கு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பழைய ஆட்சியில் கிடைக்கும் பல்வேறு விலக்குகளின் வரம்புகள் அதிகரிக்கப்படாமல் இருப்பதையும் பார்க்கும்போது, நிதியமைச்சர் பழைய வரி முறையை முற்றிலுமாக நீக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்பது பேசுபொருளாகியுள்ளது.
2023-24 ம் ஆண்டில் 72 சதவீதம் பேர் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்து வருமான வரி தாக்கல் செய்திருந்தனர் என வருமான வரி துறை தெரிவித்திருந்தது. புதிய வருமான வரி நடைமுறையில் அறிவிப்புகள் அதிகம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் புதிய நடைமுறையை தேர்வு செய்யக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய வருமான வரி முறை Vs புதிய வருமான வரி முறை
Income Tax Old Regim: (உதாராணம்)
ஆண்டு வருமானம் 16 லட்சம் | வரி விகிதம்% | வரி |
ரூ.0-4 லட்சம் | - | - |
ரூ.4-8 லட்சம் | 5% வரி | ரூ. 20,000/- |
ரூ.8 முதல் 12 லட்சம் | 10% வரி | ரூ.40,000/- |
ரூ.12 - 16 லட்சம் | 15% வரி | ரூ.60,000/- |
மொத்தம் | ரூ.1,20,000/- |
புதிய அல்லது பழைய முறையில் எது சிறந்தது என விளக்க உதாரணமாக தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.16 லட்சம் என எடுத்துகொண்டால், அவர் புதிய நடைமுறையில் வரியாக ரூ.1,20,000/- செலுத்த வேண்டியிருக்கும். (பார்க்க..இதன் விவரம் மேலே உள்ள அட்டவணையில் விரிவாக உள்ளது.)
2025-26 நிதியாண்டில் பட்ஜெட் அறிவிப்பின் படி, 12 லட்சம் வரை வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, ரூ.50,000 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
இதுவே பழைய வருமான வரி முறையை தேர்வு செய்பவராக இருந்தால் வரி தொகை அதிகமாக இருக்கும். ஏனெனில், பழைய முறையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30% வரி விதிப்பு இருந்தது.
வருமான வரி முறை - எதை தேர்வு செய்வது?
வருமான வரி தாக்கல் செய்யும்போது பழைய முறை / புதிய முறை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருக்கிறதா? அது தனிப்பட நபரின் முடிவு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஒருவரின் Financial Profile-யின் அடிப்படையிலேயே தேர்வு செய்வது நல்லது. பழைய முறை அல்லது புதிய முறை இரண்டில் எதில் உங்களுக்கு வரி விலக்கு, அதிக ரிட்டர்ன் கிடைக்கிறது என்பதை கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம்.
மேலும் வாசிக்க..
Income Tax 2024 Vs 2025: கடந்த பட்ஜெட் வரி விகிதம் Vs புதிய பட்ஜெட் வரி விகிதம்: எவ்வளவு இருந்தது ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

