New Income Tax Bill: புதிய வருமானவரி மசோதா... பில்ட் அப் கொடுக்கும் நிதியமைச்சர்... என்னவா இருக்கும்.?
Budget 2025 Income Tax: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிர்மலா சீதாராமன், புதிய வருமானவரி திட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளது, அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். அதில், மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தது வருமானவரிச் சலுகைகள் குறித்த அறிவிப்பு. இந்த நிலையில், வருமானவரி தொடர்பாக புதிய சட்ட மேசோதா தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி சட்ட மசோதா
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த வாரம் புதிய வருமான வரி திட்டம் மசோதா தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நிதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையில், 60 ஆண்டு காலமாக இருந்துவரும் வருமானவரி சட்டத்தை மாற்றும் வகையில் புதிய வருமானவரி சட்ட மசோதா இருக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எளிமையாகும் வருமான வரி முறை
நேரடி வரி விதிப்புக்காக கொண்டுவரப்படும் புதிய மசோதா, 50 சதவீதம் பழைய சட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வருமான வரி பிடித்தத்திற்கான படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த அறிவிப்பு, அனைவரது எதிர்ப்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. ஏற்கனவே பழைய முறை, புதிய முறை என இரண்டு முறைகளில் வருமானவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மசோதா மூலம், பழைய முறைகளை எடுத்துவிட்டு, புதியதாக ஒரு முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது.
தற்போது தாக்கலாக இருக்கும் புதிய சட்ட மசோதா, நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், நடுத்தர வர்க்கத்தினரை லட்சுமிதேவி ஆசிர்வதிக்கட்டும் என பிரதமர் மோடி ஏற்கனவே பேசிய நிலையில், இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

