மேலும் அறிய

Budget 2024 Date and Time: இடைக்கால பட்ஜெட் எப்போது, ​​எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது..? முழு விவரம் உள்ளே!

இடைக்கால பட்ஜெட் எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, இதை எங்கு பார்க்க முடியும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். 

Budget 2024 Date and Time: பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டானது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படும் அல்வா விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பட்ஜெட் மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, இதை எங்கு பார்க்க முடியும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். 

2024 பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024ம் தேதி (நாளை) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் (அநேகமாக) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். நாட்டின் பொருளாதாரம் சுமூகமாகச் செயல்படுவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையிலும், பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை நிலைத்திருக்கும் வகையிலும் புதிய அரசு அமையும் வரை, இடைக்கால பட்ஜெட்டில், வருவாய், செலவு மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன.

இடைக்கால பட்ஜெட் எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது..?

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் முழு அதிகாரப்பூர்வ நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, முதலில் நிதியமைச்சர் தனது வீட்டில் இருந்து நார்த் பிளாக்கிற்கு புறப்படுவார். அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் அதன்பிறகு நிறைவடையும். அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொடங்கும்.

இன்று நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று புதன்கிழமை (ஜனவரி 31) தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டாக உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி உள்ள ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

பட்ஜெட்டை எங்கே பார்க்கலாம்?

ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் இந்த பட்ஜெட்டை நேரலையில் நேரடியாக பார்க்கலாம். தூர்தர்ஷன், சன்சாத் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது தவிர, இது PIB இன் சமூக தளத்திலும், நிதி அமைச்சகத்தின் YouTube சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதுபோக, ஏபிபி நாடு பட்ஜெட் லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்துகொள்ளலாம். செய்திகள் வாயிலாகவும் முழு பட்ஜெட் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Embed widget