TN Budget 2022:மார்ச் 18-ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு
TN Budget 2022 Date: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18ஆம் தேதி காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்ப்டும் என்றும், பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BREAKING | மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!https://t.co/wupaoCQKa2 | #TNBudget #BudgetSession #TNGovt pic.twitter.com/CQ3UK04H0c
— ABP Nadu (@abpnadu) March 8, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்