TN Agri Budget 2022: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.10 கோடியில் உபகரணங்கள்...! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..
TN Agri Budget 2022: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 195 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2022-2023ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது அறிவிப்பில், “கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 195 வழங்கப்படும். கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 950 ஆகவும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூபாய் 10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

