TN Budget 2022:பிணியின்மை செல்வம் விளைவின்பம் ... திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் பிடிஆர் !
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-2023-ஐ நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய உறையை திருக்குறளை சுட்டிக்காட்டி தொடங்கினார். அதில், “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற திருக்குறளை போல் மக்களுக்கு நோய் பாதுகாப்பு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வலம் உள்ளிட்டவை மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நாங்கள் கூறியவற்றை நிறைவேற்றி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்https://t.co/wupaoCQKa2 #TNBudget2022 | #TNBudgetWithABPNadu #PTR pic.twitter.com/f0dlwWl8PH
— ABP Nadu (@abpnadu) March 18, 2022
இந்நிலையில் நிதியமைச்சர் மேற்கோள் காட்டி கூறிய திருக்குறளின் விளக்கம் என்ன?
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும் என்பது இத் திருக்குறளின் விளக்கமாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்