Budget 2025 : தமிழ்நாடு பெயரே இல்ல! நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம்.. பட்ஜெட்டை விளாசிய திமுக
Budget 2025 : ம்த்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் பெயர் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி மற்றும் பீகார் வாக்காளர்களை கவரும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2025:
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை மகிழ்விக்கும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றது. அதேநேரம், பாஜக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும், பீகார் அரசுக்கு பட்ஜெட்டில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: Union Budget 2025: சுங்க வரியே கிடையாது..! 36 மருந்துகளுக்கு விலக்கு அளித்த மத்திய அரசு - என்னென்ன நோய்கள்?
தயாநிதி மாறன் குற்றச்சாட்டு:
இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் பெயர் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் குறித்து அவர் பேசுகையில் இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டை பார்க்கும் அப்படித்தான் தெரிகிறது, குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Budget 2025: 3 அறிவிப்புகள் ஓகே! மத்ததெல்லாம் மாயாஜாலம்…! மத்திய பட்ஜெட்டை சாடிய இபிஎஸ்! அதிர்ச்சியில் பாஜக!
#WATCH | #UnionBudget2025 | DMK MP Dayanidhi Maran says, "It's a very disappointing Budget. The Budget seems to be like that, it's planned in such a way to woo the voters for Delhi, especially the Delhi elections coming on 5th February. The FM has given a big exemption saying… pic.twitter.com/hQ88jbvR6r
— ANI (@ANI) February 1, 2025
ரூ.12 லட்சம் வரை வரி இல்லை என்ற நிதியமைச்சர் மிகப்பெரிய விலக்கை அளித்துள்ளார். ஆனால், அதன் பின்னர் 8-12 லட்சத்திற்கு 10% வரி உள்ளது எனக் கூறுகிறார். இது குழப்பமடையச் செய்துள்ளது. 12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்க அவர் முயல்கிறார். கட்டமைப்பு சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் பீகாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இந்த வருடம் அங்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என்று எந்தவொரு அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை





















