மேலும் அறிய

Budget 2025: 3 அறிவிப்புகள் ஓகே! மத்ததெல்லாம்  மாயாஜாலம்…! மத்திய பட்ஜெட்டை சாடிய இபிஎஸ்! அதிர்ச்சியில் பாஜக!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.

பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
Embed widget