மேலும் அறிய

Budget 2024: எகிறும் எதிர்பார்ப்புகள்..! வருமான வரியில் மாற்றமா? - இன்று தாக்கலாகிறது மோடி 2.0 அரசின் இடைக்கால பட்ஜெட்

Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்:

விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமா?

இந்த இடைக்கால பட்ஜெட்டில்,  கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. ஆனால்,   நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாக உள்ளது. அதேநேரம், தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவரும் விதமாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், எரிபொருட்களின் விலையை குறைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் சில அறிவிப்புகளும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை  முறியடிக்க உள்ளார்.

நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர்:

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். முன்னதாக,  இந்திய வரலாற்றில் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நபராக இருக்கிறார். அதாவது 1959 முதல் 1964 வரையிலான ஆட்சிக் காலத்தில்  5 முழு பட்ஜெட்டையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அதோடு, 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.

 

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (02.09.2026): பொன்னையும் பொருளையும் கொட்டி கொடுப்பாளா தனலட்சுமி? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (02.09.2026): பொன்னையும் பொருளையும் கொட்டி கொடுப்பாளா தனலட்சுமி? கேரளா லாட்டரி முடிவுகள்!
GOLD RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (01.09.2026): கேரளா லாட்டரி குலுக்கலில் கோடிகளை குவிக்கப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (01.09.2026): கேரளா லாட்டரி குலுக்கலில் கோடிகளை குவிக்கப்போவது யாரு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
Mitsubishi Pajero India Launch: மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
Embed widget