மேலும் அறிய

Bank Holidays November 2023: நவம்பர் மாதம் வங்கிக்கு எத்தனை நாள் லீவ் தெரியுமா? இதோ தெரிஞ்சிட்டு போங்க..!

நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bank Holidays November 2023: நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

வங்கிகள் விடுமுறை:

வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

நவம்பர் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் தீபாவளி, பலிபிரதிபதா,  விக்ரம் சம்வந்த் புத்தாண்டு, சத் பூஜை, குருநானக் ஜெயந்தி, கனகதாச ஜெயந்தி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, சத் பூஜையையொட்டி நவம்பர் 20ஆம் தேதி அன்று, பீகார், ராஜஸ்தான் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை தின பட்டியல்:

  • நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா (கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 5: ஞாயிற்று கிழமை
  • நவம்பர் 10: வாங்கலா திருவிழா (மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 11: இரண்டாவது சனிக்கிழமை
  • நவம்பர் 12: ஞாயிற்று கிழமை
  • நவம்பர் 13: கோவர்தன் பூஜை, தீபாவளி (திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 14: தீபாவளி, பலிபிரதிபதா, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம், லட்சுமி பூஜை (மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 15: பைடூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லட்சுமி பூஜை (உத்தர பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், இமாச்சல் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 19: ஞாயிற்று கிழமை
  • நவம்பர் 20: சாத் பூஜை (பீகார், ராஜஸ்தானில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 23: செங் குட்செனெம், இகாஸ் பக்வால் (உத்தர காண்ட், சிக்கமில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 25: நான்காவது சனிக்கிழமை
  • நவம்பர் 26: ஞாயிற்று கிழமை
  • நவம்பர் 27: குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி (மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட், தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் வங்கிகளுக்கு விடுமுறை)
  • நவம்பர் 30: கனகதாச ஜெயந்தி (கர்நாடகாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, நவம்பர் 25ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதத்திலும் தமிழகத்தில்  4 நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget