Amazon Prime Day 2022: ரியல்மி முதல் ஐபோன் வரை ! எக்கச்சக்க ஆஃபர் ! - தள்ளுபடி விற்பனையை துவங்கிய அமேசான்!
iPhone 13 128GB மாறுபாடு தற்போது ரூ.66,900 என்னும் விலையில் கிடைக்கிறது

அமேசான் பிரைம் டே 2022 :
அமேசான் வர்த்தக தளத்தின் சிறப்பு தள்ளுபடி விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள விற்பனையில் மொபைல் போன்கள், அமேசான் சாதனங்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் மீது தள்ளுபடிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
#AmazonPrimeDay is Live Now! #DiscoverJoy with great deals and new launches on top brands. Shop Now - https://t.co/CLIprzyNoI pic.twitter.com/bRWbzjrOfH
— Amazon India (@amazonIN) July 22, 2022
ஆப்பிள் ஐபோன் 13 :
iPhone 13 128GB மாறுபாடு தற்போது ரூ.66,900 என்னும் விலையில் கிடைக்கிறது. இந்த மொபைலின் நிர்ணயிக்கப்பட்ட விலைரூ. 79,900 .உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் iPhone 13 Pro 128GB மாறுபாடு மொபைலை 12,900 ரூபாய் தள்ளுபடியில் ரூ. 99,900 (நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 1,19,900)க்கு பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் கட்டணமில்லா EMI கட்டண விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யலாம், மேலும் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 5 சதவீதம் கூடுதல் கேஷ்பேக்கைப் பெறலாம்.
iQoo 9 5G
இந்த மொபைலின் விலை ரூ. 49,990. அமேசான் தள்ளுபடியில் இந்த மொபைல் ரூபாய் 39,990 க்கு கிடைக்கிறது. பழைய மொபைபோனை மாற்றுவதன் மூலம் ரூ.17,900 வரையில் தள்ளுபடியை பெறலாம். அமேசான் iQoo 9 உடன் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI கட்டண விருப்பத்தையும் வழங்குகிறது.
Realme Narzo 50A பிரைம்:
அமேசானின் பிரைம் டே 2022 விற்பனையின் போது நீங்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், விற்பனையின் போது கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடியுடன் Realme Narzo Prime 50A கிடைக்கிறது.இந்த மொபைலில் 750 ரூபாய் தள்ளுபடி பெறலாம் . மேலும் கூப்பன்களை பயன்படுத்தி 1,500 வரையில் தள்ளுபடியை பெற முடியும் . பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்ற விரும்புவர்களுக்கு ரூ 10,650 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது.
— Amazon India (@amazonIN) July 22, 2022
ஆப்பிள் ஏர்போட்ஸ் (மூன்றாம் தலைமுறை):
வொயர்லெஸ் ஹெட்போனான ஏர்போட்ஸை பெற விரும்பினால் இது ஒரு சரியான நேரம் . ரூ. 18,500 க்கு விற்பனை செய்யப்பட்ட Apple AirPods (third generation) தற்போது விற்பனையில் 16,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டு பயனர்கள் வாங்கும்போது கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 5 சதவீத கேஷ்பேக்கைப் பெறுவார்கள்.
Prime Day is almost here, and we have the perfect trick to level up your budget! ⁰
— Amazon India (@amazonIN) July 22, 2022
Sign up for Amazon Pay Later, get instant credit worth Rs 60,000 and enjoy a smooth shopping experience.
Activate now!#PayAmazonSe pic.twitter.com/JMpDiBPVVD
இது தவிர LG அல்ட்ராஜியர் QHD 32-இன்ச் மானிட்டர், சோனி பிராவியா 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி,Kindle e-book reader, அமேசான் எக்கோ (4வது ஜென், 2020 மாடல்), Amazon Fire TV Stick (மூன்றாம் தலைமுறை) உள்ளிட்டவையும் சிறப்பான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.amazon.in என்னும் இணையதள முகவரியை அணுகுங்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

