Zuno Road Safety Report: ஆண்களை விட பெண்களே பெஸ்ட், சேஃப்டி ஓட்டுநர்கள்: உறுதிசெய்த புள்ளிவிவரங்கள்
இந்த பொறுப்பான அணுகுமுறையே, ஆண்களை விட அவர்களைச் சிறந்த ஓட்டுநர்களாக மாற்றுகிறது எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்கள் சரியாக வாகனம் ஓட்ட மாட்டார்கள் என்ற பொதுவான விமர்சனமும், கேலியும் சமூகத்தில் பரவலாக உண்டு. ஆனால், ஆண்களை விட பெண்களே சிறந்த ஓட்டுநர்கள் என்பதை வாகனப் பயன்பாடு மற்றும் விபத்துகள் தொடர்பான சமீபத்திய தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன. குறிப்பாக Zuno சாலை பாதுகாப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:
இதன் ஸ்மார்ட் டிரைவ் செயலியின்படி, 17 மாநிலங்களில் 4.5 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 55 மில்லியன் கி.மீ. பயணம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், பெண்களின் சராசரி பாதுகாப்பு டிரைவிங் மதிப்பெண் 92.86 ஆக உள்ள நிலையில் ஆண்களின் டிரைவிங் மதிப்பெண் 92.43 ஆக மட்டுமே உள்ளது.
விபத்துகளின் எண்ணிக்கை
சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்துபவர்களில் ஆண்களின் சதவீதமே மிக அதிகம். தீவிரமான மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளில் ஆண்களின் பங்கேற்பே அதிக அளவில் உள்ளது. மாறாக, பெண்கள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்குவதால் அவர்கள் விபத்துகளில் சிக்குவது குறைவாகவே உள்ளது.
போக்குவரத்து விதிமீறல்கள்
போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு அபராதம் பெறுவதில் ஆண்களே முன்னிலையில் உள்ளனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, சிக்னல்களை மதிக்காமல் செல்வது, தவறான திசையில் முந்திச் செல்வது போன்ற விதிமீறல்களில் பெண்கள் ஈடுபடுவது மிகக் குறைவு.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்
மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடும் வழக்குகளைச் சரிபார்த்தால், அதில் பெருமளவிலான வழக்குகளில் (பெரும்பான்மையான சதவீதம்) ஆண்களே சிக்குகின்றனர். இந்த விதிகளில் பெண்கள் மிகவும் கண்டிப்புடன் உள்ளனர்.
காப்பீட்டு கோரிக்கைகள்
வாகனக் காப்பீடு நிறுவனங்களின் தரவுகளின்படி, விபத்துகளுக்காக காப்பீட்டுத் தொகையைக் கோரும் நபர்களில் ஆண்களே அதிகம். அதுமட்டுமின்றி, விபத்தின் தீவிரம் காரணமாக ஆண்கள் கோரும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பும் பெண்களை விட அதிகமாக உள்ளது.
காரணம் என்ன?
பெண்கள் இயல்பாகவே போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதிலும், சீட் பெல்ட் அணிவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். சாலையில் தேவையற்ற சாகசங்களில் ஈடுபடுவதையும், அபாயங்களை எடுப்பதையும் அவர்கள் தவிர்க்கின்றனர். இந்த பொறுப்பான அணுகுமுறையே, ஆண்களை விட அவர்களைச் சிறந்த ஓட்டுநர்களாக மாற்றுகிறது எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்























