மேலும் அறிய

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

Hyundai Creta Rival: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும், ஹுண்டாயின் க்ரேட்டாவிற்கு நடப்பாண்டு கடும் போட்டி நிலவும் கூறப்படுகிறது.

Hyundai Creta Rival: ஹுண்டாயின் க்ரேட்டாவிற்கு போட்டியாக சியாரா, டஸ்டர் மற்றும் செல்டோஸ் போன்ற மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் நடப்பாண்டில் அணிவகுக்கின்றன.

ஒயாதா ஹுண்டாய் க்ரேட்டாவின் ஆதிக்கம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டாவிற்கு எப்படி ஒரு இன்னோவா மாடலோ, அதே பாணியில் ஹுண்டாய்க்கான அடையாளமாக க்ரேட்டா திகழ்கிறது. ப்ராண்ட் தரப்பில் பல தரப்பட்ட கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை என்பது அண்மைக்காலமாக க்ரேட்டாவையே சார்ந்ததாக உள்ளது. கடந்த ஆண்டு ஹுண்டாயின் ஒட்டுமொத்த விற்பனையில் 35 சதவிகிதம் க்ரேட்டா மட்டுமே பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் டக்சன் மாடல் கைவிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 மாடல்கள் சேர்ந்தே 65 சதவிகித விற்பனையை எட்டியுள்ளன. விற்பனையில் ஒரே ஒரு மாடலை அதிகளவில் நம்பி இருப்பது என்பது, அதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும் ப்ராண்டின் ஒட்டுமொத்த விற்பனையையும் கடுமையாக பாதிக்கக் கூடும். அப்படிபட்ட ஒரு காலமாக நடப்பாண்டு ஹுண்டாய்க்கு அமையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

வலுவடையும் க்ரேட்டா போட்டியாளர்கள்

க்ரேட்டா கடந்த ஒரு தசாப்தத்தில் பல கடுமையான போட்டியாளர்களை எதிர்கொண்டுள்ளது. கியா செல்டோஸ் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகமானபோதே, இந்த பிரிவில் போட்டி என்பது சீராக வளர்ந்து வந்தது. ஆனால், தற்போதைய சூழல் மிகவும் மாறுபட்டதாக உள்ளது. காரணம் 6 புத்துயிரூட்டப்பட்ட அல்லது முற்றிலும் புதிய எஸ்யுவிக்கள் தரப்பிலிருந்து க்ரேட்டா போட்டி நிலவுகிறது. இந்த அழுத்தமானது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் புதிய க்ரேட்டா எடிஷன் அறிமுகம் ஆகும் வரை உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை க்ரேட்டாவின் இருப்பிடத்திற்கு சவால் விடுக்கக் கூடிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள்

1. டாடா சியாரா

டாடா சியாரா மீதான எதிர்பார்ப்பு என்பது கட்டுக்கடங்காததாக உள்ளது. ஏற்கனவே க்ரேட்டாவிற்கு போட்டியாக டாடா கர்வ் இருந்தாலும், சியாராவின் சவால் என்பது வித்தியாசமானது. 90-களில் பிரபலமாக இருந்த தனது கார் மாடலை, நவீனகாலத்திற்கு ஏற்ப முற்றிலுமாக மறுவடிவமைப்பு செய்து நடைமுறைக்கு உகந்ததாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயன்பாடுகள் மற்றும் நோக்கங்களுக்கும் ஏற்றதாக, டாடாவின் மிகவும் முழுமையான எஸ்யுவிக்களில் ஒன்றாக சியாரா திகழ்கிறது. விலை சற்ரே தீவிரமாக இருந்து இருந்தால், இதற்கான தேவை என்பது இன்னும் அதிகமாக இருந்து இருக்கும் என கூறப்படுகிறது.

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

2. புதிய கியா செல்டோஸ்

அம்சங்கள் அடிப்படையில் க்ரேட்டாவிற்கு சரி நிகரான போட்டியாளராக திகழும் செல்டோஸ், பேக்கேஜ் அடிப்படையில் ஒரு படி மேலே நிற்கிறது. கூடுதல் நீளம் மற்றும் அகலத்தை கொண்டுள்ளது. அதிகப்படியான பின்புற இருக்கை காலியிடம், பெரிய பூட், கூடுதல் ப்ரீமியம் எண்ணத்தை வழங்கும் கேபினை கொண்டுள்ளது.  ஆனாலும் அதன் விலை என்பது ப்ரீமியமாக இல்லை. விலையும் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில டாப் வேரியண்ட்கள் க்ரேட்டாவை விட மலிவானதாகவே உள்ளது. பயண தரத்தில் க்ரேட்டா ஒரு படி மேலே இருந்த நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்டில் அந்த பிரச்னையை செல்டோஸ் பூர்த்தி செய்துள்ளது. 

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

3. ரெனால்ட் டஸ்டர், நிசானின் புதிய எஸ்யுவி

இந்தியாவில் பிரபலமாக இருந்த மற்றொரு லெஜண்டரி கார் மாடலான டஸ்டரும் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ரெனால்ட் தொடங்கி வைத்த மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தான், 2015ம் ஆண்டில் அறிமுகமான க்ரேட்டா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பழைய டஸ்டர் கரடுமுரடானதாக இருந்தாலும், தரம் மற்றும் ப்ரீமியம் அம்சங்களில் க்ரேட்டாவிடம் பின்தங்கியது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அப்க்ரேடாகி வந்துள்ள டஸ்டர், க்ரேட்டாவிற்கு எல்லாவிதத்திலும் சவால் அளிக்கும் வகையில் மெருகேற்றப்பட்டுள்ளது. உயர் திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கூடுதல் மைலேஜிற்கு வழிவகை செய்யக்கூடிய,  இரண்டு டர்போ பெட்ரோல் மற்றும் ஒரு ஹைப்ரிட் ஆப்ஷனும் உள்ளது.  ஆனால், க்ரேட்டாவில் தற்போது வரை ஹைப்ரிட் ஆப்ஷன் இல்லை. இதுபோக, நிசானின் டஸ்டர் எடிஷனாக டெக்டான் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hyundai Creta Rival: க்ரேட்டாவிற்கு போதாத காலம்.! டீம்-ஃபார்ம் செய்யும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் - ஹுண்டாய் சமாளிக்குமா?

4. ஸ்கோடா குஷக், ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடா குஷக் மற்றும் ஃபோக்ஸ்வாகனின் டைகன் மாடல்களால், க்ரேட்டாவின் விற்பனைக்கு பெரிய தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், மார்ச் மாதம் அறிமுகமாக உள்ள ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், கூடுதல் அம்சங்கள், மெருகேற்றப்பட்ட தரமான உட்புறத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் சில வாடிக்கையாளர்களின் கவனத்தை க்ரேட்டா தரப்பில் இருந்து குஷக் மற்றும் டைகன் திருப்பலாம். 

கடந்த காலங்களில் க்ரேட்டா கடும் போட்டியைச் சமாளித்து முதலிடத்தை தக்கவைத்தது. ஆனால் இந்த முறை வித்தியாசம் வரவிருக்கும் கார்களின் அளவு. தொடர்ந்து மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் முன்னணியில் இருக்கலாம், ஆனால் 2026 ஆம் ஆண்டு ஹூண்டாயின் விற்பனை மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget