Duplicate Driving License: உங்க டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சிருச்சா? புதிய லைசென்ஸ் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?
Duplicate Drving License: வாகன ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் லைசென்ஸ் வாங்குவது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Duplicate Drving License: வாகன ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் லைசென்ஸ் வாங்குவதற்கான வழிமுறைகள் படிப்படியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வாகன ஓட்டுநர் உரிமம் என்றால் என்ன?
வாகன ஓட்டுநர் உரிமம் (Driving license) என்பது ஒவ்வொரு வாகன ஓட்டுநரும் கையில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய ஆவணமாகும். ஒருவேளை அது இல்லாமல் நீங்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் உள்ளிட்ட, காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் அடையாள அட்டையாகவும் ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் உங்களது ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். அதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
டூப்ளிகேட் லைசென்ஸ்:
வாகன ஓட்டுநர் உரிமம் மிகவும் பழையதாகிவிட்டாலோ, தெளிவாகத் தெரியாமலோ அல்லது கிழிந்துவிட்டாலோ, அதனை நகல் எடுத்துவைத்துக் கொள்வது நல்லது. அதேநேரம், ஓட்டுநர் உரிமம் தொலைந்துபோனால் அதற்காக கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம் வீட்டில் இருந்தபடியே டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ் பெற உங்களால் விண்ணப்பிக்க முடியும். ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டாலோ, எதிர்பாராத சூழலில் சேதம் அடைந்தாலோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றோ விண்ணப்பிக்கலாம்.
காவல்நிலையத்தில் புகார்:
உங்களது ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள். உங்கள் இதற்குப் பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான செயல்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் போக்குவரத்து துறையின் parivahan.gov.in எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- ஆன்லைன் சேவை என்ற பிரிவில் டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான சேவைகள் என்ற பிரிவை தேர்ந்தெடுக்கவும்
- உள்ளே நுழைந்ததும் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள்
- தற்போது ஆன்லைனில் லைசென்ஸ் தொடர்பாக வழங்கப்படும் சேவைகள் உங்கள் முன் தோன்றும்
- அதில் டூப்ளிகேட் லைசென்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- இப்போது கோரப்பட்ட விவரங்களை நிரப்புங்கள்
- LLD படிவத்தை நிரப்பவும்
- அதை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் படிவத்துடன் இணைக்கவும்
- ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இது ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்
- ஆன்லைன் செயல்முறை முடிந்த 30 நாட்களுக்குப் பிறகு டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம் உங்களிடம் வந்து சேரும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அசல் ஓட்டுநர் உரிமம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று LLD படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உரிய கட்டணத்தையும் செலுத்துங்கள். இதையடுத்து 30 நாட்களில் டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம் பதிவு செய்யப்பட்ட உங்களது முகவரியை வந்து சேரும்.
நகல் ஓட்டுநர் உரிமத்திற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதற்கான ரசீது உங்களுக்கு கிடைக்கும். இது டிரைவிங் லைசன்ஸ் வரும்போது உங்களுக்குத் தேவைப்படும். ஒருவேளை டூப்ளிகேட் லைசென்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டால், அந்த ரசீதை கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலத்திற்குச் சென்று விசாரிக்கலாம்.