மேலும் அறிய

E20 Petrol Issues: இது என்னடா சோதனை.! E20 பெட்ரோலால் பழைய வாகனங்களுக்கு இவ்வளவு சிக்கலா.? தீர்வுகள் என்ன.?

நாளை முதல், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், E20, அதாவது எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டியது கட்டாயம். இந்த பெட்ரோலால் பழைய வாகனங்களுக்கு என்னென்ன சிக்கல் ஏற்படும் தெரியுமா.?

கச்சா எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு நாளை முதல் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் விற்பனையை நாடு முழுவதும் கட்டாயமாக்கியுள்ளது. இந்த பெட்ரோலால், BS6 அல்லாத பழைய வாகனங்களுக்கு சற்றே சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிகிறது. அது என்னென்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

மத்திய அரசின் இந்த முடிவு எதற்காக.?

2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், 20 சதவிகித எத்தனால் கலந்த E20 பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு, கச்சா எண்ணெய்  இறக்குமதியை குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் மாசுபாட்டை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதே சமயம், எத்தனாலை கலப்பது, அந்நியச் செலாவணியை சேமிப்பதுடன், மாசுபாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது. இதனால் தான், மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

E20 பெட்ரோல் என்றால் என்ன.?

E20 பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் உள்ளது. எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பிற விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஆல்கஹால் ஆகும். இந்த கலவை, பெட்ரோலின் தரத்தை சுமார் 95 சதவீதம் வரை அதிகரித்து, அதன் விளைவாக வாகனத்தின் என்ஜின் சீராக இயங்குவதோடு, நாக் சத்தமும் குறைகிறது.

மேலும், ஏப்ரல் 2023-க்குப் பிறகு தயாரிக்கப்படும் BS6 இரண்டாம் கட்ட வாகனங்கள் E20 பெட்ரோல் எரிபொருளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த புதிய பெட்ரோலை பயன்படுத்தும்போது, இந்த வாகனங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.

பழைய வாகனங்களுக்கு என்ன பாதிப்பு.?

இந்நிலையில், 2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில், E20 பெட்ரோலின் தாக்கம் சற்றே வித்தியாசமாக இருக்கலாம்.

  • பழைய வாகனங்களின் மைலேஜ் 3 முதல் 7 சதவீதம் வரை குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • இந்த எத்தனால், பழைய ரப்பர் பாகங்களையும், எரிபொருள் குழாய்களையும் சேதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
  • எத்தனால், காற்றில் ஈரப்பதத்தை கசியச் செய்து, பெட்ரோல் டேங்க்கில் நீர் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • இது என்ஜினை ஸ்டார்ட் செய்வதில் சிரமங்களை ஏற்படுத்துவதோடு, அரிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

இருப்பினும், வாகனத் துறை அமைப்புகளின்படி, E20 பயன்பாட்டினால் பெரிய என்ஜின் கோளாறுகள் எதுவும் பதிவாகவில்லை.

E20 பெட்ரோலினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வழிகள்

உங்கள் வாகனம் பழையதாக இருந்தால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் E20 பெட்ரோலால் உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம்.

  • இதற்கு, நீங்கள் ரப்பர் குழாய்க்கு பதிலாக E20-க்கு இணக்கமான குழாயை பொருத்த வேண்டும்.
  • இது தவிர, எரிபொருள் நிலைப்படுத்தியை பயன்படுத்துங்கள். ஏனெனில், அது ஈரப்பதம் உருவாவதைத் தடுக்கிறது.
  • மேலும், அழுக்கு என்ஜினுக்குள் செல்லாதவாறு, எரிபொருள் வடிகட்டியை முன்கூட்டியே மாற்றவும்.
  • இது தவிர, காரின் டேங்க்கை காலியாக வைத்திருக்க வேண்டாம். மிகவும் காலியாக உள்ள டேங்கில் ஈரப்பதம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • வாகனத்தை தவறாமல் ஓட்ட முயற்சி செய்யுங்கள். வாகனத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பது பிரச்னையை அதிகரிக்கக்கூடும்.
  • மேலும், உங்கள் வாகனத்திற்கு அரிப்புத் தடுப்புக்கான பூச்சை பூசலாம். உலோகத் தொட்டியில் (Petrol Tank) துருப்பிடிப்பதை தடுக்க இது அவசியம்.

 

 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget