மேலும் அறிய

Volkswagen Shutdowns: ஹிட்லரின் கனவுக் குழந்தை - 90 ஆண்டுகள், ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் அதிரடி முடிவு

Volkswagen Shutdowns: ஹிட்லரின் கனவுக் குழந்தையாக கருதப்படும் ஃபோக்ஸ்வேகன் 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணிநீக்கம் போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

Volkswagen Shutdowns: ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 3 முக்கிய கார் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவன முடிவுகள்:

ஃபோக்ஸ்வேகன் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூடுதலாக அதன் முக்கிய உற்பத்தி ஆலைகளில் குறைந்தது மூன்று ஆலைகளை மூடவும் முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீது மட்டுமின்றி, அதன் கடந்த காலத்தின் மீதும் உலகின் பார்வையைத் திருப்பியுள்ளது. ஃபோக்ஸ்வேகன், அதன் புகழ்பெற்ற 'தாஸ் ஆட்டோ' என்ற கோஷத்துடன், ஜெர்மனியைச் சேர்ந்த உலகளாவிய கார் உற்பத்தியாளராகக் கருதப்படுகிறது. நிறுவனத்தைப் பற்றி அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், இந்நிறுவனத்தின் ஸ்தாபனத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். மேலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய ஆலையாக உள்ள, வொல்ஃப்ஸ்பர்க் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவரும் ஹிட்லார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் பிறப்பு: மக்களுக்கான பார்வை

1930 களின் முற்பகுதியில், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தீவிர ஆர்வலரான அடால்ஃப் ஹிட்லர், சராசரி ஜெர்மன் குடிமகனுக்கு மலிவு மற்றும் அணுகக்கூடிய ஒரு "மக்கள் காரை" சந்தைப்படுத்த கற்பனை செய்தார். ஜெர்மனியில் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதும்,  மக்களிடையே ஒற்றுமை உணர்வை மேம்படுத்துவதும் அவரது குறிக்கோளாக இருந்தது. 1933 ஆம் ஆண்டில், அதிபராக ஆன சிறிது நேரத்திலேயே, ஹிட்லர் இந்த வாகனத்திற்கான திட்டங்களை ஒரு வாகன கண்காட்சியில் அறிவித்தார். இந்த காரை வடிவமைக்க பிரபல ஆட்டோமொபைல் இன்ஜினியரான ஃபெர்டினாண்ட் போர்ஷை நாடினார். இந்த ஒத்துழைப்பு வரலாற்றில் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாக மாறிய ஃபோக்ஸ்வேகன் பீட்டில் வாகனத்தின் உற்பத்திக்கு வழிவகுத்தது.

ஹிட்லருக்கான ஃபோக்ஸ்வேகன் 'ஜாய்'

ஹிட்லரின் பார்வையை உயிர்ப்பிப்பதில் பெர்டினாண்ட் போர்ஷே முக்கிய பங்கு வகித்தார். 1935 இல் KdF-Wagen (Kraft durch Freude-Wagen அல்லது "Strength through Joy Car") என அழைக்கப்பட்ட முன்மாதிரியை அவர் வடிவமைத்தார். இது இரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட குடும்பங்களுக்கு நம்பகமான வாகனமாக இருந்தது. ஹிட்லர் தனிப்பட்ட முறையில் இந்த கார் வடிவமைப்பை அங்கீகரித்தார். மேலும் மே 26, 1938 இல், வொல்ஃப்ஸ்பர்க்கில் உள்ள ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இது ஃபோக்ஸ்வேகன் ஜாய் காரை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்டது.

போர்ஷேயின் பொறியியல் திறமை ஹிட்லரின் அரசியல் ஆதரவுடன் இணைந்து புதுமைகளை வேகமாகக் கண்டுபிடிக்கும் சூழலை உருவாக்கியது. இருப்பினும், போர்ஷே வடிவமைப்பு மற்றும் பொறியியலில் கவனம் செலுத்தியபோது, ​​ஹிட்லரின் உந்துதல்கள் அவரது சித்தாந்த இலக்குகள் மற்றும் ராணுவ லட்சியங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது ஃபோக்ஸ்வேகன்:

KdF-Wagen பிப்ரவரி 17, 1939ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்ததால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கார்களில் இருந்து ராணுவ வாகனங்களுக்கு மாறியது. 

1941ம் ஆண்டு நிலவரப்படி, நிறுவனம் 4,609 ராணுவ வாகனங்களை தயாரித்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என வெறும் 41 கார்களை மட்டுமே தயாரித்து இருந்தது. அப்போது நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 12,712 ஆக இருந்தது. அடுத்த ஆண்டில், நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான 157 பயணிகள் கார்களையும், 8,549 ராணுவ வாகனங்களையும் உற்பத்தி செய்தது. அப்போது பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 4,000 அளவிற்கு அதிகரித்தது. 

1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது, ​​ஃபோக்ஸ்வேகன் 4,329 வாகனங்களைத் தயாரித்தது, இவை அனைத்தும் ராணுவப் பயன்பாட்டிற்கானது மட்டுமே ஆகும். இத்தொழிற்சாலையானது போரின் போது ஜெர்மன் படைகளுக்கு அவசியமான Kübelwagen மற்றும் Schwimmwagen போன்ற ராணுவ பயன்பாட்டு வாகனங்களை உற்பத்தி செய்தது.

இந்த காலகட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் கட்டாய உழைப்பைச் சுரண்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நேரத்தில் அதன் பணியாளர்களில் 60% பேர் போர்க் கைதிகள் மற்றும் வதை முகாம் கைதிகளை உள்ளடக்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சோவியத் கைதிகள் மற்றும் வதை முகாம்களில் இருந்து வந்த யூதத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து கட்டாயத் தொழிலாளர்களை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியது என கூறப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகனின் போருக்குப் பிந்தைய மாற்றம் & புகழ்

பல சர்ச்சைகள் பின்தொடர்ந்தாலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வெற்றிக் கதை போருக்குப் பிறகுதான் தொடங்கியது. வெற்றி அதன் சவால்களுடன் வந்தது. தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்ததால், உற்பத்தி நிறுத்தப்பட்டது. இருப்பினும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆதரவுடனும், அதன் நாஜி உடனான தொடர்பிலிருந்து விலகிய ரீபிராண்டிங் முயற்சியுடனும், ஃபோக்ஸ்வேகன் மீண்டும் பீட்டில் கார் மாடலை 1945ம் ஆண்டு உற்பத்தி செய்ய தொடங்கியது. குறைந்த காலத்திலேயே, போருக்கு பிந்தைய ஜெர்மனியின் மீட்பு மற்றும் பொருளாதார அதிசயத்தின் அடையாளமாக பீட்டில் மாறியது.

இந்நிறுவனம் நாஜி ஜெர்மனியுடனான அதன் வரலாற்று உறவுகளை அங்கீகரித்துள்ளது மற்றும் அதன் கடந்த காலம் தொடர்பான வெளிப்படைத்தன்மையை நோக்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. "ஏப்ரல் 11, 1945 இல் வந்த அமெரிக்க துருப்புக்கள் ஆலையின் ஆயுத உற்பத்தியை நிறுத்தி, அதன் அடிமைத் தொழிலாளர்களை விடுவித்தன. நாஜி சர்வாதிகாரத்தின் முடிவு ஃபோக்ஸ்வேகனுக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது" என்று நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் இறுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராகவும், ஜெர்மனியில் மிகப்பெரிய முதலாளியாகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தான், தொழிலாளர் சங்கங்களுடனான பிரச்னைகள் மற்றும் செலவுகளைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு மத்தியில், 3 உற்பத்தி ஆலைகளை மூடும் முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
Embed widget