Upcoming EV Under 10 Lakh: வந்துட்டாங்கையா வந்துட்டாங்க! ₹10 லட்சத்துக்குள் எலக்ட்ரிக் கார்கள்!.. 2025-ல் களமிறங்கும் EV கார்கள்
Upcoming Electric Cars Under Rs 10 Lakhs:இந்த ஆண்டு எலக்ட்ரிக் கார் பிரியர்களுக்காகவே கார்நிறுவனங்கள் ₹10 லட்சத்துக்கு குறைவான பஜட்ஜட் EV கார்கள்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது, மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஏற்ப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தவிர்த்து அதிகமான பேர் இப்போது எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். இந்த ஆண்டு எலக்ட்ரிக் கார் பிரியர்களுக்காகவே கார்நிறுவனங்கள் ₹10 லட்சத்துக்கு குறைவான பஜட்ஜட் EV கார்கள்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டாடா டியாகோ EV
டாடா ஏற்கனவே மின்சார வாகன உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ஏற்கெனவே 2023-ல் Tiago EV-க்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய 2025 வேரியண்ட் சிறிய பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஒரு சார்ஜில் சுமார் 200-220 கிமீ வரை மைலேஜ் தரும்.இதன் ஆரம்ப விலை ₹8 லட்சத்தில் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எம்ஜி காமெட் EV 2025 :
MG Motor India-வின் மிகச்சிறிய இரண்டு கதவு EV கார் ஆன இது புதிய 2025 எடிஷனில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் புதிய டிசைன் வரவுள்ளது. இடு240 கிமீ வரை மைலேஜ், ₹9.5 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்டி மற்றும் குறுகிய சாலைகளில் எளிதாக ஓட்டக்கூடியதா இருக்கும்.
மேலுல் இதில் 10.25-இன்ச் ட்வின் டிஸ்பிளே, AI வாய் கட்டுப்பாடுகள், voice assistant போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் இடம் பெற உள்ளது.பெண்கள், புதிய ஓட்டுனர்கள் மற்றும் டெக்கி ஆண்கள்/பெண்களுக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இது இருக்கும்.
3. மாருதி சுசூகி eWX EV:
மாருதி சுசூகியின் முதல் முழுமையான EV ஹாட்ச்பேக் மாடல் இதுவாகும், ஜப்பானில் முதல் முறையாக அறிமுகப்படுத்தபட்ட இந்த மாருதி eWX, இப்போது இந்திய சந்தைக்கேற்ப உள்ளூர் தேவைக்கேற்ப சில மாற்றங்களுடன் வரவுள்ளது. இது 250-300 கிமீ மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை10 லட்சம் விலைக்குள் வர வாய்ப்பு.
4.ரெனோ க்விட் EV
ரெனோ இந்தியா, தனது பிரபலமான க்விட் மாடலின் புதிய எலக்ட்ரிக் வெர்ஷனை 2025 இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் வெர்ஷனை ஏற்கனவே சீனா மற்றும் பிற உலக சந்தைகளில் ‘City K-ZE’ என அறிமுகமாகி உள்ளது.
இந்தியாவுக்கான மாடல் 250 கிமீ செல்லும் வகையிலும் மற்றும் ₹10 லட்சத்திற்கு கீழ் விலை கொண்டதாக இருக்கலாம்.நகர பயணத்திற்கும், சிறிய குடும்பங்களுக்கும் ஏற்றதாய் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரின் இந்திய வடிவத்தில், நவீன இன்ஃபோடெயின்மென்ட் அம்சங்கள், சில முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் (dual airbags, ABS), முக்கியமாக low-cost maintenance இதன் சிறப்பாகும்.





















