மேலும் அறிய

Feb Car Launch: புதுசா எஸ்யுவி, எம்பிவி, EV, 7 சீட்டர் - பிப்ரவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை - முழு விவரம்

Feb 2026 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரி மாதத்தில் எஸ்யுவி, எம்பிவி, மின்சார கார் உள்ளிட்ட பலதரப்பட்ட கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Feb 2026 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக உள்ள கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாத கார் பட்டியல்:

2026ம் ஆண்டின் முதல் மாதத்தில் பல முக்கியமான கார்களின் வெளியீடு மற்றும் அறிமுகம் நடைபெற்றது. அதில் கியா செல்டோஸ், மஹிந்த்ரா XUV 7X0, ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை அடங்கும். அதுபோக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் எஸ்யுவி, எம்பிவி, மின்சார எடிஷன் மற்றும் 7 சீட்டர் என பலதரப்பட்ட கார் மாடல்களும் சந்தைப்படுத்தப்பட உள்ளன. உள்ளூர் நிறுவனங்கள் தொடங்கி வெளியூர் ப்ராண்ட்களின் மாடல்கள் என மொத்தம் 6 கார்கள் இந்த மாதம் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

புதியதாக அறிமுகமாக உள்ள 6 கார் மாடல்கள்:

1. எம்ஜி மெஜஸ்டர்

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.40 முதல் ரூ.46 லட்சம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இன்ஜின் அடிப்படையிலான ஃப்ளாக்‌ஷீப் மாடலான, மெஜஸ்டர் கார் மாடலை வரும் 12ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. க்ளோஸ்டர் அடிப்படையிலான இந்த காரானது முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், க்ளோஸ்டர் உடன் ஒப்பிட்டால் புதிய மெஹஸ்டரானது மிகவும் தீவிரமான டிசைன் மொழியை கொண்டுள்ளது. உட்புறமானது பெரும்பாலும் க்ளோஸ்டரின் லே-அவுட்டை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால், அம்சங்கள் அடிப்படையில் மேம்பட்டதாக உள்ளது. இன்ஜின் அடிப்படையில் மாற்றமின்றி, 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் தொடர உள்ளது. ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் அம்சங்களுடன், 8 ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.


Feb Car Launch: புதுசா எஸ்யுவி, எம்பிவி, EV, 7 சீட்டர் - பிப்ரவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை - முழு விவரம்

2. BMW X3 30 xDrive M Sport Pro

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.75 முதல் ரூ.78 லட்சம்

பிஎம்டபள்யு நிறுவனத்தின் X3 லைன் - அப்பில் மிகுந்த சக்திவாய்ந்த எடிஷனாக, BMW X3 30 xDrive M Sport Pro கார் மாடல் வரும் பிப்ரவரி 16ம் தேதி உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ரேஞ்ச் டாப்பிங் X3 வேரியண்டானது ஏற்கனவே விற்பனையில் உள்ள 2.0 லிட்டர்  டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலின் வலுவான எடிஷனாக கருதப்படுகிறது. ஆல் வீல் ட்ரைவ் அம்சங்களுடன் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் க்ரோமுக்கு பதிலாக க்ளோஸ் ப்ளாக் ட்ரிம், பெரிய 20 இன்ச் அலாய் வீல்கள், முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லைட்களுக்கு ஸ்மோக்ட் ஃபினிஷ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உட்புற லே-அவுட்டானது லோயர் X3 வேரியண்டில் இருந்து அப்படியே தொடர்கிறது.

3. நிசான் க்ராவைட்

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.6 முதல் ரூ.9 லட்சம்

கடந்த ஜனவரி மாதத்திலேயே அறிமுகமாகி இருக்க வேண்டிய நிசான் க்ராவைட் மாடலனாது, தற்போது பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் மாடலின் நிசான் எடிஷனாகும். ஒரே மாதிரியான இன்ஜின் ப்ளாட்ஃபார்மை கொண்டிருந்தாலும், வடிவமைப்பு அடிப்படையில் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. உட்புறத்திலும் ஓரளவும் வித்தியாசமான டச் வழங்கப்படலாம். ட்ரைபரில் உள்ள அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாக்ஸை கொண்டிருக்கிறது.  


Feb Car Launch: புதுசா எஸ்யுவி, எம்பிவி, EV, 7 சீட்டர் - பிப்ரவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை - முழு விவரம்

4. டாடா சியாரா மின்சார எடிஷன்

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.20 முதல் ரூ.30 லட்சம்

இன்ஜின் அடிப்படையிலான சியாரா மாடலின் விளம்பரத்தின்போதே, மின்சார எடிஷனுக்குமான டாடா விளம்பரங்களும் தீவிரமாக இருந்தது. இந்த மாத இறுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம். இன்ஜின் எடிஷனுடன் ஒப்பிடுகையில், வித்தியாசமான முன்புற ஸ்டைலிங் குறிப்பாக க்ரில் நீக்கப்பட்டு தனித்துவமான பம்பர் டிசைனை மின்சார எடிஷன் கொண்டுள்ளது. 55kWh மற்றும் 65kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருப்பதோடு, ஆல்வில் ட்ரைவ் மற்றும் ரியர் வீல் ட்ரைவ் ஆப்ஷன்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. மாருதி இ-விட்டாரா

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.15 முதல் ரூ.24.4 லட்சம்

மாருதியின் முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாரா, 49kWh மற்றும் 61kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் பிப்ரவரியில் சந்தைப்படுத்த வாய்ப்புள்ளதாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்குமாம். ஏராளமான அம்சங்களை கொண்டிருப்பதோடு, கடந்த டிசம்பரில் நடந்த பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Feb Car Launch: புதுசா எஸ்யுவி, எம்பிவி, EV, 7 சீட்டர் - பிப்ரவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை - முழு விவரம்

6. ஃபோக்ஸ்வாகன் டெய்ரான்

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: ரூ.48 முதல் ரூ.50 லட்சம்

இந்திய சந்தைக்கான டெய்ரான் மாடலை அண்மையில் ஃபோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்திய நிலையில், உள்ளூரில் அதற்கான அசெம்ப்ளி பணிகளும் தொடங்கியுள்ளன. ப்ராண்டின் ஃப்ளாக்‌ஷிப் எஸ்யுவி ஆக உருவெடுக்க உள்ள  இந்த மாடலானது, உள்ளூரில் ஃபாட்ர்சுனர், கோடியாக், க்ளோஸ்டர் மற்றும்மெரிடியன் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட உள்ள 7 சீட்டர் ஆல்வீல் ட்ரைவ் அம்சத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 7 ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.

Frequently Asked Questions

பிப்ரவரி 2026 இல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் கார்கள் எவை?

எம்ஜி மெஜஸ்டர், BMW X3 30 xDrive M Sport Pro, நிசான் க்ராவைட், டாடா சியாரா மின்சார எடிஷன், மாருதி இ-விட்டாரா மற்றும் ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் ஆகியவை பிப்ரவரி 2026 இல் அறிமுகமாக உள்ளன.

பிப்ரவரியில் அறிமுகமாகும் எம்ஜி மெஜஸ்டரின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

எம்ஜி மெஜஸ்டரின் எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு ரூ.40 முதல் ரூ.46 லட்சம் வரை ஆகும். இது 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 8 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் வரலாம்.

BMW X3 30 xDrive M Sport Pro மாடலில் என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன?

இந்த மாடல் ஆனது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ஆல் வீல் ட்ரைவ், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், க்ளோஸ் ப்ளாக் ட்ரிம், 20 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஸ்மோக்ட் ஃபினிஷ் விளக்குகளை கொண்டுள்ளது.

நிசான் க்ராவைட் எந்த மாடலின் நிசான் எடிஷன் ஆகும்?

நிசான் க்ராவைட் என்பது ரெனால்ட் டஸ்டர் காரின் நிசான் எடிஷன் ஆகும். இது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் உடன் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா சியாரா மின்சார எடிஷன் எப்போது சந்தைக்கு வரும்?

டாடா சியாரா மின்சார எடிஷன் இந்த மாத இறுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது 55kWh மற்றும் 65kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget