Upcoming 7 Seater SUV: XUV 700, சஃபாரியை ஒடவிடனும்.. முன்னணி ப்ராண்ட்களின் புதிய 7 சீட்டர்கள், ஹைப்ரிட் ஆப்ஷன்கள்
Upcoming 7 Seater SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா, ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் மூன்று புதிய 7 சீட்டர் எஸ்யுவிக்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ளது.

Upcoming 7 Seater SUV: ஹோண்டா, ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்களின் புதிய 7 சீட்டர் எஸ்யுவிக்கள், அடுத்த 12 முதல் 15 மாதங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
புதிய 7 சீட்டர் எஸ்யுவிக்கள்:
இந்திய அட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் நடைமுறைக்கு உகந்த இடவசதி மற்றும் இருக்கை அம்சங்கள் காரணமாக, ஃபுல் சைஸ் எஸ்யுவிக்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் இந்த பிரிவில் மஹிந்த்ராவின் XUV700 மற்றும் டாடாவின் சஃபாரி ஆகியவை மிகவும் பிரபலமான 7 சீட்டர் எஸ்யுவிக்களாக உள்ளன. இருப்பினும், இந்த பிரிவில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அடுத்த 12 முதல் 15 மாதங்களில் இந்த பிரிவில், முன்னணி நிறுவனங்களால் அடுத்தடுத்து புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் ஹோண்டா, ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவன மாடல்களும் அடங்கும். அவை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் தொகுத்து கீழே ட்பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி:
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவியானது, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள PF2 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இது பெட்ரோ மட்டும், வலுவான ஹைப்ரிட் மற்றும் முற்றிலும் மின்சார பவர்ட்ரெயின் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் அம்சங்களை கொண்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட காரானது எலிவேட் மாடலின் நீட்டிக்கப்பட்ட எடிஷன் என கூறப்பட்ட நிலையில், அது முற்றிலும் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆக இருக்கும் என நிறுவனம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள நிறுவனத்தின் ஆலையில், முற்றிலும் உள்ளூர்மயமாக்கலுடன் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது.
இன்ஜின் ஆப்ஷன்களில் சிட்டி மற்றும் எலிவேட் மாடல்களில் உள்ள, நேட்சுரலி ஆஸ்பிரேடட் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்படலாம். அதேநேரம் டாப் எண்ட் வேரியண்ட்களில் அட்கின்சன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் யூனிட்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாம். இரட்டை மோட்டார்களை கொண்டு பெட்ரோல் இன்ஜினுடன் சேர்ந்து,அட்கின்சன் சைக்கிளானது எப்படி செயல்படுகிறது என்பதை, சிட்டி e:HEV மாடலில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும், இதே செட்டப்பை புதிய 7 சீட்டர் எஸ்யுவியில் எதிர்பார்க்கலாம். இந்த கார் 2027ம் ஆண்டில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
2. ரெனால்டின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் எஸ்யுவியை 2026ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது, உள்நாட்டில் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ள டஸ்டர் எஸ்யுவியின், 7 சீட்டர் எடிஷனாக இருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போரியல் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த காரானது, ப்ளாட்ஃபார்ம், அம்சங்கள் மற்றும் பவர்ட்ரெயின் விவரங்கள் டஸ்டருன் பகிர்ந்துகொள்ளும்.
டிசைன் அடிப்படையில் ரெனால்டின் 7 சீட்டர் எஸ்யுவியானது தனக்கான தனித்துவத்தை பெறும் என்றும், கேபினானது நீட்டிக்கப்பட்ட நீளம் காரணமாக அதிகப்படியான இடவசதியை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டின் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் முதன்மையான மாடலாக நிலைநிறுத்துவதற்காக, இந்த காரில் கூடுதல் அம்சங்களை சேர்கக் கூடும். வழக்கமான பெட்ரோல் இன்ஜின் இடம்பெறுவதுடன், ரெனால்ட் போரியல் 7 சீட்டர் எஸ்யுவி ஆனது டாப் எண்ட் வேரியண்ட்களில் வலுவான ஹைப்ரிட் யூனிட்டையும் பெறக்கூடும்.
3. நிசானின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய ப்ரீமியம் எஸ்யுவியை அறிமுகப்படுத்த உள்ளதாக, நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அண்மையில் உறுதிப்படுத்தினார். இந்த 7 சீட்டர் எஸ்யுவி ஆனது, உள்நாட்டு சந்தையில் நாளை அதாவது அக்டோபர் 7 அன்று அறிமுகமாக உள்ள, நிசானின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவியை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. டஸ்டர் மற்றும் போரியல் மாடல்கள் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்வதை போன்றே, நிசானின் புதிய 5 சீட்டர் மிட்சைஸ் எஸ்யுவி ஆனது நிறுவனத்தின் 7 சீட்டருடன் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.
வெளியாகியுள்ள பரவலான தகவல்களின்படி, நிசானின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆனது அதிகப்படியான அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இதில் லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, வெண்டிலேடட் சீட்ஸ், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டூயல் பேன் சன்ரூஃப், டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே ஆகியவை இடம்பெறக்கூடும். இன்ஜின் அடிப்படையில் இதில் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். டாப் என்ட் வேரியண்ட்களில் 4X4 ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.






















