மேலும் அறிய

Volvo EX30: சொகுசுக்கு பெயர்போன வால்வோ.. ப்ராண்டின் மலிவு விலை கார், 480 கிமீ ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங்

Volvo EX30: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வால்வோ நிறுவனத்தின் மலிவு விலை காரான, EX30 மாடல் குறித்த முக்கிய விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Volvo EX30: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வால்வோ நிறுவனத்தின் மலிவு விலை மாடலான,  EX30 முற்றிலும் மின்சார காராகும்.

வால்வோ EX30

இந்திய ஆட்டோமொபைல் சந்த்கையில், ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனம் EX30 கார் மாடலை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ப்ராண்டின் எண்ட்ரி லெவல் மின்சார எஸ்யுவியான புதிய கார், EX40 மற்றும் EC40 மாடல்களுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  புதிய EX30 காரானது, வால்வோ நிறுவனம் சார்பில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை கார் மாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. உள்நாட்டில் இது மெர்சிடஸ் EQA, BMW iX1 LWB உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

வால்வோ EX30 - ப்ராண்டின் மலிவு விலை கார்

ஒரே ஒரு அல்ட்ரா ட்ரிம்மில் விற்பனை செய்யப்படும் EX30 காரின் விலை, அறிமுக சலுகையாக 39 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காரை வாங்க விரும்புபவர்கள் ரூ.41 லட்சத்தை செலுத்த வேண்டி இருக்கும். மெர்சிடஸ் EQA (ரூ.67.20 லட்சம்) , BMW iX1 LWB (ரூ.49 லட்சம்), அயானிக் 5 (ரூ.46.30 லட்சம்), சீலியன் 7 (ரூ.48.90 - 54.90 லட்சம்), மாடல் Y (ரூ.59.89 - 67.89 லட்சம்), EV6 (ரூ.65.97 லட்சம்) மற்றும் கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் (ரூ.54.90 லட்சம்) போன்ற போட்டியாளர்களை காட்டிலும், EX30 காரின் விலை மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக உள்ளது.

வால்வோ EX30 - ரேஞ்ச், பேட்டரி விவரங்கள்

வால்வோ ப்ராண்டின் இந்தியாவிற்கான EX30 எடிஷன், 69KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதன் மூலம் ரியல் ஆக்சில் மவுண்டட் எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டு, 272hp மற்றும் 343Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை, வெறும் 5.3 விநாடிகளில் எட்டும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 480 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. நிஜ உலக பயன்பாட்டில் குறைந்தபட்சம் 350 கிலோ மீட்டர் ரேஞ்சை எளிதாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புற பயன்பாட்டிற்கும், சிறிய வார இறுதி அவுட்டிங்கிற்கும்  EX30 நல்ல தேர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வால்வோ EX30 - வடிவமைப்பு

வால்வோவின் முதல் தரைவழி மின்சார வாகனம் கீலியின் SEA2 (நிலையான அனுபவக் கட்டமைப்பு) மூலம் ஆதரிக்கப்படுகிறது. EX30 SUV இன் நீளம், அகலம் மற்றும் உயர அளவீடுகள் முறையே 4,233 மிமீ, 1,940 மிமீ மற்றும் 1,550 மிமீ ஆக உள்லது. வீல்பேஸ் 2,650 மிமீ ஆக வழங்கப்பட்டுள்ளது.

வால்வோ EX30 - தொழில்நுட்ப அம்சங்கள்

வால்வோ ப்ராண்டின் EX30 மின்சார காரானது வெளிப்புறத்தில் க்ளோஸ்ட் ஆஃப் முன்புற க்ரில், ஆட்டோமேடிக் அசிஸ்ட் உடன் கூடிய தோர் ஹேம்மர் வடிவிலான எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் EX30 காரானது 19 இன்ச் ஏரோ ஆப்டிமைஸ்ட் வீல்களை நிலையான ஆப்ஷனாக கொண்டிருக்கிறது. 318 லிட்டர் பூட் ஸ்பேஸை பெற்று இருப்பதோடு, அதனை ரியர் சீட்களை 60:40 என மடிப்பதன் மூலம் மேலும் அதிகரிக்கலாம். 7 லிட்டர் முன்புற ட்ரங்கும் வழங்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், கூகுள் பில்ட் இன் உடன் கூடிய 12.3 இன்ச் வெர்டிகலி மவுண்டட் டச்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்ட் ஆன்ராய்ட் ஆட்டோ, புதிய 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 9 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் ஆடியோ சிஸ்டம், ஃபிக்‌ஷ்ட் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், 8 வே பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் EX30 காரில் நிரப்பப்பட்டுள்ளன.

வால்வோ EX30 - பாதுகாப்பு, கலர் ஆப்ஷன்கள்

ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய கார்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில், EX30 மின்சார காரானது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இதற்காக லெவல் 2 ADAS, 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகிய அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வால்வோ நிறுவனமானது EX30 மின்சார காரை, க்ளவுட் ப்ளூ, க்ரிஸ்டல் ஒய்ட், ஒனிக்ஸ் ப்ளாக், சேண்ட்ய் ட்யூன் மற்றும் வேபர் க்ரே ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்குகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Embed widget