மேலும் அறிய

EV With 400 Km Range: கம்மி விலை, அதிக ரேஞ்ச் - 400 கி.மீ., பயணத்தை வாரி வழங்கும் பட்ஜெட் மின்சார கார்கள் - முழு லிஸ்ட்

EV With 400 Km Range: இந்திய மின்சார கார் சந்தையில் 400 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கக்கூடிய, பட்ஜெட் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

EV With 400 Km Range: இந்திய மின்சார வாகன சந்தையில் 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மின்சார கார் மாடல்கள்

மின்சார கார் வாங்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கிய அம்சம் ரேஞ்ச் என்றால், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய பல ஆப்ஷன்கள் உள்நாட்டு சந்தையில் கிடைக்கின்றன. மலிவு விலையில் கிடைக்கக் கூடிய டாடா நெக்ஸான், எம்ஜி விண்ட்சர் மற்றும் பஞ்ச் ஆகிய கார் மாடல்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவையை குறைக்கின்றன. மின்சார காரை வாங்கும் பயனர்கள் அப்போதும் நகர்ப்புறங்களில் மட்டுமே பயன்படுத்துவதில்லை, அவ்வப்போது நெடுஞ்சாலை பயணங்களையும் மேற்கொள்கின்றனர். எனவே, 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் அளிக்கக் கூடிய மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

400+ கி.மீ., ரேஞ்ச் அளிக்கும் மின்சார கார்கள்:

1. டாடா பஞ்ச் EV

மோட்டார் சைக்கிளிலிருந்து காருக்கு மாற விரும்புவோர், மின்சார காரை பரிசீலித்தால் டாடாவின் பஞ்ச் சரியான தேர்வாக இருக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 468 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பதாக கூறப்படுகிறது. அதிகப்படியான ரேஞ்ச் மற்றும் காம்பேக்ட் அளவு ஆகியவற்றின் சிறந்த கலவையாக விளங்குகிறது. தினசரி நகர்ப்புற பயணங்களுக்கு சிறந்ததாக இருந்தாலும், நெடுஞ்சாலை பயணங்களுக்கு முன்கூட்டியே உரிய திட்டமிடல் என்பது அவசியமாகிறது. காரணம் நகரின் வெளிப்புறங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் என்பது கணிசமாகவே உள்ளன. இதன் விலை ரூ.9.69 லட்சத்தில் தொடங்கி ரூ.12.59 லட்சம் வரை நீள்கிறது.

2. எம்ஜி விண்ட்சர் EV

அம்சங்கள் மற்றும் வசதியான கேபினுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களுக்கு எம்ஜி விண்ட்சர் நல்ல தேர்வாக இருக்கும். இது 449 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய டச்ஸ்க்ரீன், ADAS, நடைமுறைக்கு உகந்த இண்டீயர் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. உள்ளூரில் இந்த காரானது க்ரேட்டா மற்றும் நெக்ஸானின் மின்சார எடிஷன்களுடன் போட்டியிடுகிறது. வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் நகர்ப்புற பயனர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது. இந்த எளிய அணுகல் மற்றும் கையாளும் திறன் என்பது மிகமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் விலை 13 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 18 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.


EV With 400 Km Range: கம்மி விலை, அதிக ரேஞ்ச் - 400 கி.மீ., பயணத்தை வாரி வழங்கும் பட்ஜெட் மின்சார கார்கள் - முழு லிஸ்ட்

3. டாடா நெக்ஸான்

நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிற்கும் ஏற்ற ஒரு சரியான கலவையிலான மின்சார வாகனமாக டாடாவின் நெக்ஸான் உள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்ததாகவும், எப்போதாவது நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொண்டால் அதையும் எளிதில் சமாளிக்கும் விதமாகவும் உள்ளது. உள்ளூர் சந்தையில் மஹிந்த்ரா XUV400 காருடன் நெக்ஸான் மோதுகிறது. பரவலான சர்வீஸ் சப்போர்ட் இருந்தாலும், சார்ஜிங் உட்கட்டமைப்புகள் என்பது நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது. எனவே நெடுந்தூர பயணங்களின்போது உரிய திட்டமிடல் அவசியம். 489 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேஞ்ச் அளிக்கக் கூடிய இந்த காரின் விலை, 12 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 17 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.

4. ஹுண்டாய் க்ரேட்டா

பிரபலமான எஸ்யுவி வடிவில் மின்சார காரை வாங்க விரும்புவோருக்கு, 473 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கக் கூடிய ஹுண்டாயின் க்ரேட்டா நல்ல தேர்வாக இருக்கும். கம்ஃபர்ட் மற்றும் சொகுசு அம்சங்கள் மீது இந்த கார் அதிக கவனம் செலுத்துகிறது. எம்ஜி விண்ட்சர் பிரதான போட்டியாளராக உள்ளது. பெட்ரோல் எஸ்யுவிக்களில் இருந்து மாற விரும்பும் பயனர்களுக்கு எளிமையான மாற்றத்தை இந்த கார் வழங்குகிறது. அதேநேரம், இந்த செக்மெண்டில் கார்களின் விலை சற்றே அதிகமாகும். அதன்படி, க்ரேட்டாவின் விலை 18 லட்சத்தில் தொடங்கி 24.70 லட்சம் வரை நீள்கிறது.


EV With 400 Km Range: கம்மி விலை, அதிக ரேஞ்ச் - 400 கி.மீ., பயணத்தை வாரி வழங்கும் பட்ஜெட் மின்சார கார்கள் - முழு லிஸ்ட்

5. மஹிந்த்ரா XUV400

மஹிந்திரா XUV400 (456 கி.மீ. வரை) நடைமுறைக்கு உகந்த பயண வரம்பு மற்றும் நேரடியான செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது நன்றாகப் பொருந்துகிறது. இதன் போட்டியாளர்களில் டாடா நெக்ஸான் மாடலும் அடங்கும். காரை வைத்திருக்கும் அனுபவமானது சார்ஜிங் வசதியைப் பொறுத்தது. ஆனால் இதன் 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான பயண வரம்பு, வழக்கமான பயன்பாட்டில் அடிக்கடி சார்ஜ் செய்வதற்காக நிறுத்துவதைக் குறைக்க உதவுகிறது. இதன் விலை 15 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 17 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Embed widget