மேலும் அறிய

Tatas Affordable EV: கம்மி விலை, குட்டி மின்சார காருக்கு பெரிய பேட்டரி கொடுக்க டாடா திட்டம் - 360+KM ரேஞ்ச்

Tatas Affordable EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடாவின் மிகவும் மலிவு விலை மின்சார கார் மாடலான, டியாகோவிற்கு கூடுதல் ரேஞ்சுக்காக பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட உள்ளதாம்.

Tatas Affordable EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடாவின் மிகவும் மலிவு விலை மின்சார கார் மாடலான, டியாகோ புதிய பேட்டரி மூலம் 360 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்குமாம். 

டாடாவின் மலிவான மின்சார கார்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடாவின் டியாகோ மின்சார எடிஷன் 2022ம் ஆண்டு, ப்ராண்டின் மிகவும் மலிவு விலை மின்சார காராகவும், இந்தியாவின் முதல் வெகுஜன சந்தைக்கான மின்சார வாகனமாகவும்  அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க காலங்கள் முதல் இந்த மின்சார ஹேட்ச்பேக் 19.2kWh மற்றும் 24kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு முதன்முறையாக சிறிய அப்டேட்களைப் பெற்ற டியாகோ EV, அடுத்த சில வாரங்களில் முக்கிய மேம்படுத்தலை பெற உள்ளது. இருப்பினும், அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டாடா டியாகோ - பெரிய பேட்டரி & கூடுதல் ரேஞ்ச்

ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, டியாகோவின் புதிய மின்சார எடிஷனானது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 366 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய பெரிய 30kWh பேட்டரி பேக்குடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 19kWh மற்றும் 24kWh பேட்டரி பேக்குகள் முறையே 223 கி.மீ. மற்றும் 293 கி.மீ. தூரம் பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பேட்டரியானது, கோட்டியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பிரிஸ்மாடிக் செல்களைப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. டாடா பஞ்ச் EV-ஐப் போலவே, மேம்படுத்தப்பட்ட 30kWh பேட்டரி கொண்ட டியாகோ EV-யிலும் புதிய 6-இன்-1 ஐ-ட்ரைவ் மோட்டார் இடம்பெறும். இது 80 முதல் 88PS வரையிலான சக்தியையும், 140Nm டார்க்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 டாடா டியாகோ EV, 50kW-க்கு மேற்பட்ட வேகமான DC சார்ஜிங்கை ஆதரிக்கும், இது அதன் சார்ஜிங் நேரத்தை கணிசமாக குறைக்கும்.

Tatas Affordable EV: கம்மி விலை, குட்டி மின்சார காருக்கு பெரிய பேட்டரி கொடுக்க டாடா திட்டம் - 360+KM ரேஞ்ச்

புதிய டியாகோ EV - கூடுதல் அம்சங்கள் என்ன?

புதிய டாடா டியாகோ EV-யில், புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், திருத்தப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், ட்வின் பாரெல் செட்-அப் & LED DRL-களுடன் மறுவடிவமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பின்புற விளக்கு அமைப்பு ஆகியவை இடம்பெறும் என சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன.

பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், பளபளப்பான கருப்பு நிற சென்டர் கன்சோல் மற்றும் டச்ஸ்க்ரீன் அடிப்படையிலான ஏசி கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு உட்புறமும் மாற்றியமைக்கப்படலாம். இந்த மின்சார வாகனத்தில் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, பின்பக்க ஏசி வென்ட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவையும் வழங்கப்படலாம். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய டாடா டியாகோ EV-யில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget