மேலும் அறிய

Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்

Tata Sierra SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா சியாரா கார் மாடலின் விலை ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Tata Sierra SUV: டாடா சியாரா எஸ்யுவி கார் மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

டாடா சியாரா எஸ்யுவி அறிமுகம்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விண்டேஜ் மாடலான சியாரா, இந்திய எஸ்யுவி கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, நவீன காலத்திற்கு ஏற்ப சியாரா காரை மேம்படுத்தி டாடா நிறுவனம் தற்போது மீண்டும் சந்தைப்படுத்தியுள்ளது.  கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோமொபைல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது முதலே எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், அண்மைக்காலமாக இதுதொடர்பான அப்டேட்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அதன் முடிவாக, டாடா சியாரா கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

டாடா சியாரா எஸ்யுவி - விலை, வேரியண்ட்கள்:

நவீனா சியாரா கார் மாடலின் தொடக்க விலை 11 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் இந்த காரை முன்பதிவு செய்யலாம் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் கார்களின் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாராவில் கிடைக்கும் வேரியண்ட்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஸ்மார்ட்+
  • ப்யூர்
  • ப்யூர்+
  • அட்வென்சர்
  • அட்வென்சர் +
  • அக்கம்ப்ளிஸ்ட்
  • அக்கம்ப்ளிஸ்ட் + என மொத்தம் 7 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

டாடா சியாரா எஸ்யுவி - இன்ஜின் ஆப்ஷன்கள்

டாடா சியாரா எஸ்யுவி கார் மாடலில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டர்போ இன்ஜின் ஆனது 170hp மற்றும்  280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் DCA ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டர்போ டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுடன் ஆல் வீல் ட்ரைவ் மற்றும் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

Image

டாடா சியாரா எஸ்யுவி - உட்புற அம்சங்கள்

சியாராவின் உட்புறமானது விசாலமான இடவசதி கொண்ட ப்ளாக் & க்ரே தீமிலான கேபினை கொண்டுள்ளது. இதில் 3 கனெக்டட் ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற்றுள்ளது. அதில் முதலாவது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகவும், இரண்டாவது இன்ஃபோடெயின்மெண்டிற்காகவும், மூன்றாவதாக இருப்பது முன் இருக்கை வரிசையில் உள்ள சக பயணிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வெண்டிலேடட் மற்றும் பவர்ட் முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வாய்ர்லெஸ் சார்ஜிங், ரியர் சன்ஷேட்ஸ் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.

டாடா சியாரா எஸ்யுவி - மற்ற வசதிகள்

கர்வ் காரில் இருக்கும் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் பின்பற்றப்பட்டு இலுமினேடட் லோகோ மற்றும் டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்னாப்ட்ராகன் சிப் மற்றும் 5ஜி ஆதரவுடன் கூடிய iRA கனெக்டட் தொழில்நுட்பம், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், சவுண்ட்பார் உடன் கூடிய 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் செட்-அப், 18 மோட்கள் கொண்ட டால்பி அட்மாஸ், பனோரமிக் சன்ரூஃப், மூட் லைட்டிங், ரியர் சன்ஷேட்ஸ், ஹபர் ஹெட்-அப் டிஸ்பிளே ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

டாடா சியாரா எஸ்யுவி - வண்ண விருப்பங்கள்:

டாடா சியாரை காரை வாங்குபவர்கள் ஆறு ஒற்றை வண்ண விருப்பங்களை தேர்வு செய்யலாம். அதில் அந்தமான் அட்வென்சர், பெங்கால் ரூஜ், கூர்க் க்ளவுட்ஸ், மிண்டல் க்ரே, மூனாறு மிஸ்ட் மற்றும் ப்ரிஸ்டன் ஒயிட் ஆகியவை அடங்கும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புஷ்பா போல கெத்து காட்ட Vespa ஸ்கூட்டரில் போலாமா? லிஸ்ட் இதுதான்
புஷ்பா போல கெத்து காட்ட Vespa ஸ்கூட்டரில் போலாமா? லிஸ்ட் இதுதான்
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
Embed widget