மேலும் அறிய

Mahindra XEV 9S Rival: XEV 9S போட்டியாக டாடாவின் புது மின்சார கார் - 7 சீட்டர், 500KM ரேஞ்ச் - தீபாவளி பட்ஜெட்டில் அடங்குமா?

Tata Safari EV: மஹிந்த்ராவின் XEV 9S கார் மாடலுக்கு போட்டியாக டாடா சஃபாரி மின்சார எடிஷன் வரும் தீபாவளிக்கு சந்தைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tata Safari EV: டாடா சஃபாரி மின்சார எடிஷன் 500 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சஃபாரி மின்சார எடிஷன்:

இந்திய மின்சார கார் சந்தையானது உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் பல புது வரவுகளை எதிர்கொள்ள உள்ளது. மின்சார வாகன பிரிவில் செலுத்தி வரும் ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் டாடா தனது புது மாடல்களை தயார்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் சியா, சஃபாரி மற்றும் அவின்யா ஆகிய மூன்று மின்சார மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த வகையில் ப்ராண்டின் முதன்மையான 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆனது தீபாவளி நேரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரானது உள்நாட்டு விற்பனையில் அசத்தி வரும் மஹிந்த்ராவின் XEV 9S மாடலுக்கு நேரடி போட்டியாக உருவெடுக்க உள்ளது.

டாடா சஃபாரி EV - 500கிமீ ரேஞ்ச், அம்சங்கள்..

சஃபாரி மின்சார எடிஷன் லோயர் வேரியண்ட்களில் 65KWh பேட்டரி பேக்கையும், டாப் வேரியண்ட்களில் 75KWh பேட்டரி பேக்கையும் பெறக்கூடுமாம். பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளுக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் இந்த ரேஞ்சானது 450 முதல் 500 கிலோ மீட்டருக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Mahindra XEV 9S Rival: XEV 9S போட்டியாக டாடாவின் புது மின்சார கார் - 7 சீட்டர், 500KM ரேஞ்ச் - தீபாவளி பட்ஜெட்டில் அடங்குமா?

டாடா சஃபாரியின் மின்சார எடிஷனானது, ஹாரியர் மின்சார எடிஷன் உருவாக்கப்பட்ட அதே  Acti.ev+ ப்ளாட்ஃபார்மில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபார்மானது ஆல் வீல் ட்ரைவ் திறன் வழங்க வழிவகை செய்கிறது. மேலும் ஃப்ளாட் ஃப்ளோர் மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைக்காக அதிகரிக்கப்பட்ட நீளம் ஆகியவற்றை ஏற்படுத்த உதவுகிறது. சஃபாரியின் மின்சார எடிஷனானது ரியர் வீல் ட்ரைவ் அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், டாப் வேரியண்ட்களில் டூயல் மோட்டர் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாம். இதில் ஆஃப் ரோட் மற்றும் பனி சூழ்ந்த சூழல் ஆகியவற்றுக்கு என பிரத்யேகமான ட்ரைவ் மோட்களை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: PM Modi: ”மத்திய அமைச்சர்கள் டெல்லியை விட்டு வெளியே செல்லக்கூடாது” மோடி திடீர் உத்தரவு, முக்கிய ஆலோசனை

டாடா சஃபாரி EV - டிசைன், உட்புற வசதிகள்

சஃபாரி மின்சார எடிஷனின் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றமானது, இன்ஜின் எடிஷனை அப்படியே பிரதிபலிக்கிறது. அதேநேரம், EV-க்கு என சில பிரத்யேகமான பேட்ஜ் உள்ளிட்ட மாற்றங்களை பெறக்கூடும். முழு அகலத்திற்குமான வெல்கம் மற்றும் குட்பாய் அனிமேஷனுடன் கூடிய கனெக்டட் எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் ஸ்ட்ரிப்கள், க்ளோஸ்ட் ஆஃப் பாராமெட்ரிக் க்ரில், 19 இன்ச் ஏரோடைனமிக்  அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளதாம். 

காரின் உட்புறத்தை கவனத்தில் கொண்டால், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 12.3 இன்ச் ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, 4 ஸ்போக் பேக்லிட் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை பெறலாம். பாதுகாப்பை உறுதிப்படுத்த 540 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, லெவல் 2 ADAS டெக், முன்புற பார்கிங் சென்சார்கள், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் முன்புற இருக்கைகள்,  டூயல் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல அம்சங்களு எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா சஃபாரி EV - விலை விவரங்கள்

சஃபாரி மின்சார எடிஷனானது வெஹைகிள் டூ லோட், வெஹைகிள் டூ வெஹைகிள் திறனை கொண்டிருக்குமாம். 7 மற்றும் 6 இருக்கை அமைப்புகளில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். குறிப்பாக 6 இருக்கைகள் கொண்ட எடிஷனின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மின்சார காரின் இரண்டாவது வரிசையில் வெண்டிலேடட் வசதி பொருத்தப்பட உள்ளதாம். தீபாவளி சீசன் அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சஃபாரியின் மின்சார எடிஷன் சந்தைப்படுத்தப்படும் போது, 23 லட்சம் முதல் 30 லட்ச வரை விலை வரம்பை பெறலாம் என கூறப்படுகிறது. இதன் நேரடி போட்டியாளரான மஹிந்த்ராவின் XEV 9S கார் மாடலின் விலை ரூ.19.95 லட்சத்தில் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget