Tata Discount: சரவெடி ஆஃபர்.. ரூ.1.40 லட்சம் வரை டிஸ்கவுண்ட் - டாடாவின் எந்த காருக்கு எவ்வளவு?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாடா நிறுவனம் தனது புகழ்பெற்ற கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைய முன்னிட்டு பல முன்னணி கார் நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளனர். அந்த வகையில், டாடா நிறுவனமும் தனது காருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே காணலாம்.
1. Harrier:
டாடா நிறுவனத்தின் முக்கியமான காராக டாடா Harrier காரின் கடந்தாண்டு மாடலுக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரமும், எக்ஸேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரமும் உள்பட மொத்தமாக ரூபாய் 83 ஆயிரம் மொத்த தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மாடலான டாடா Harrier காருக்கு ரூபாய் 33 ஆயிரம் முதல் ரூபாய் 58 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

2. Safari:
டாடா Safari காருக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்தாண்டு Safari மாடலுக்கு ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். எக்சேஞ்ச் தொகையாக ரூபாய் 25 ஆயிரம் அறிவித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 83 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். நடப்பாண்டு டாடா Safari வேரியண்டிற்கு ரூபாய் 33 ஆயிரம் முதல் ரூபாய் 58 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.
3. Altroz / Altroz Racer:
டாடாவின் பிரபலமான Altroz மற்றும் Altroz Racer காருக்கு ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 85 ஆயிரம் வரை ரொக்கத் தள்ளுபடி அளித்துள்ளனர். எக்சேஞ்ச் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 05 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் வெளியான இதே காரின் pre-facelift வேரியண்டிற்கு ரொக்கமாக ரூபாய் 40 ஆயிரமும், எக்சேஞ்ச் ரூபாய் 25 ஆயிரமும் தள்ளுபடி அளித்துள்ளனர். ரூபாய் 70 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.
4. Punch:

டாடாவின் வெற்றிகரமான படைப்பு டாடா பஞ்ச் ஆகும். கடந்தாண்டு மாடலான டாடா Punch காருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 28 ஆயிரம் அளித்துள்ளனர். நடப்பாண்டு காருக்கு ரொக்கமாக ரூபாய் 5 ஆயிரம் ரொக்கமாகவும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரமாக அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 23 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.
5. Nexon:
டாடாவின் நெக்சான் காருக்கு ( கடந்தாண்டு மாடல்) ரூபாய் 35 ஆயிரம் ரொக்கமாக தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 10 ஆயிரம் அறிவித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு தயாரிக்கப்பட்ட Nexon காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரமும் அளித்துள்ளனர். மொத்தமாக இந்த காருக்கு ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளனர்.
6. Tiago:
டாடாவின் வெற்றிகரமான கார் டாடா Tiago. நடப்பாண்டு மாடலுக்கு மொத்தமாக ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளனர். இந்தாண்டு தயாரிக்கப்பட்ட டாடா Tiago காருக்கு ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.
7. Tigor :

டாடா நிறுவனத்தின் டாடா Tigor ( கடந்தாண்டு மாடல்) காருக்கு மொத்த தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரம் அளித்துள்ளனர். Tigor காரின் இந்தாண்டு மாடலுக்கு ரூபாய் 35 ஆயிரம் அளித்துள்ளனர்.
8. Curvv:
டாடா நிறுவனத்தின் Curvv காருக்கு ரொக்கமாக ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாகவே ரூபாய் 30 ஆயிரம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு மாடல் ஆகும். நடப்பாண்டு மாடலுக்கு ரொக்கமாக ரூபாய் 20 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 20 ஆயிரமும் என மொத்தமாக ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.






















