மேலும் அறிய

Skoda Slavia: ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் புது ஸ்லாவியா..! போட்டியாளர்களை சமாளிக்குமா? மைலேஜ், பாதுகாப்பு எப்படி?

Skoda Slavia Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் நாளை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

Skoda Slavia Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் நாளை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்:

ஸ்கோடா ஸ்லாவியாவின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது நாளை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதிய மாடலுக்கான டீசரை வெளியிட்டு பல்வேறு அம்சங்களுக்கான எதிர்பார்ப்புகளை உற்பத்தி நிறுவனம் தூண்டிவிட்டுள்ளது.  கூடுதல் வெளிப்புற விவரங்களை வெளிப்படுத்துவதோடு, இந்த செடான் முந்தைய எடிஷனின் மிகவும் பிரபலமான அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. சமீபத்திய டீசரானது, திருத்தப்பட்ட க்ரில், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் ஒரு புதிய அலாய் வீல் அமைப்பை பெறுவதை உறுதி செய்கிறது. 

ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற டிசைன்

ஸ்லாவியாவின் முன்பக்கத்தில் தான் மிகப்பெரிய தோற்ற மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்ரில்லில் இப்போது பிரதானமான குரோம் வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், ஹெட்லேம்ப் யூனிட்கள் திருத்தப்பட்ட உள் பாகங்களையும் மேம்படுத்தப்பட்ட LED அடையாளங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்களும், அவற்றுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஃபாக்-லேம்ப் ஹவுசிங்குகளும் காணப்படுகின்றன. ஜன்னல்களுக்கான க்ரோம் வடிவமைப்பு, தற்போதுள்ள காரிலிருந்து அப்படியே பின்பற்றப்படுகிறது. சமீபத்திய டீசர், பக்கவாட்டு மற்றும் பின்புறப் பகுதிகளை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. புதிய 5 ஸ்போக் அலாய் வீல்கள் ஒரு ஸ்போர்ட்டியான தோற்றத்தை உறுதி செய்கின்றன. ஆனால் இந்த வீல்கள் தற்போதைய 16-இன்ச் விட்டத்தையே தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெயில் லேம்ப்கள் முந்தைய செடான் மாடலைப் போன்ற அமைப்பையே தக்க வைத்துக் கொள்வதாகத் தெரிகிறது. அதே சமயம் ரூஃப்லைன் மற்றும் பில்லர்கள் மாற்றமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - அம்சங்கள், வசதிகள்

தற்போதுள்ள 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன், ஒரு புதிய 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவும் இணைக்கப்படும். திருத்தப்பட்ட இருக்கை உறைகள் மற்றும் ட்ரிம் ஃபினிஷ்கள் உட்புறத்தைப் புதுப்பிக்கக்கூடும். இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள், எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், சிங்கிள்-பேனல் சன்ரூஃப், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஷ்டம் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு உபகரணங்களிலும் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படக்கூடும். தற்போதைய ஸ்லாவியா எடிஷனில் உள்ள, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்குடன் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், TPMS மற்றும் ISOFIX மவுண்ட்கள் ஏற்கனவே உள்ளன.

இதையும் படியுங்கள்: Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்

ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்

பின் இருக்கை மசாஜ் வசதியையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவர்டிரெய்ன் வரிசை தற்போதைய மாடலில் இருந்து தொடரும். 1.0-லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீட் மேனுவல் அல்லது புதிய 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைந்து, சுமார் 116 PS மற்றும் 178 Nm பவரைத் தொடர்ந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய 1.5-லிட்டர் TSI இன்ஜின், 7 ஸ்பீட் DSG ட்ரான்ஸ்மிஷனுடன் தனது 150 PS மற்றும் 250 Nm பவரைத் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் ஆக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - விலை, போட்டியாளர்கள்

 ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றுடன் உள்ளூர் சந்தையில் ஸ்லாவியாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் போட்டியிட உள்ளது. இதன் விலை, தற்போதைய எடிஷனின் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 18.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான வரம்பிலிருந்து சற்றே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Slavia: ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் புது ஸ்லாவியா..! போட்டியாளர்களை சமாளிக்குமா? மைலேஜ், பாதுகாப்பு எப்படி?
ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் புது ஸ்லாவியா..! போட்டியாளர்களை சமாளிக்குமா? மைலேஜ், பாதுகாப்பு எப்படி?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget