மேலும் அறிய

Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்

Skoda Epiq EV: ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் மாடலான எபிக், 440 கிலோ மீட்டர் ரேஞ்சுடன் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Skoda Epiq EV: ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் மாடலான எபிக்கானது, ADAS உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்கோடா மலிவு விலை மின்சார கார்..!

ஸ்கோடா சார்பில் உற்பத்திக்குத் தயார் நிலையில் உள்ள எபிக் EV, அதிகாரப்பூர்வப் படங்கள் மூலம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2024ம் ஆண்டு கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து ஓராண்டு கழித்து மியூனிக் மோட்டார் ஷோவில் உற்பத்திக்கு நெருக்கமான எடிஷன் வெளியிடப்பட்டது. இது ப்ராண்டின் மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலையிலான மின்சார வாகனம் இதுவாகும். புதிய MEB+ ஆர்கிடெக்ட்சரில் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷனைக் கொண்ட  நிறுவனத்தின் முதல் மாடல் எபிக் கார் ஆகும்.

ஸ்கோடா வெளியிட்டுள்ள அறிவிப்பில், எபிக் காரானது நகரப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விசாலமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபினையும், அதன் பிரிவிலேயே மிகப்பெரிய லக்கேஜ் வைக்கும் இடத்தையும் வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது இந்த மின்சார வாகனம், ஸ்கோடாவின் ஒரு தயாரிப்பு மாடலில், அந்த பிராண்டின் புதிய 'மாடர்ன் சாலிட்' என்ற டிசைன் லேங்குவேஜின் அறிமுகத்தையும் கொண்டு வந்துள்ளது.

எபிக் மின்சார காரின் டிசைன் விவரங்கள்:

ஸ்கோடாவின் மாடர்ன் சாலிட் வடிவமைப்புத் தத்துவத்தைப் பின்பற்றி, எபிக் EV-யில் மெல்லிய DRL-களுடன் கூடிய ப்ளாக்ட்-அவுட் கிரில், மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், ஸ்லாட்டுகளுடன் கூடிய ஸ்போர்ட்டியான முன்பக்க பம்பர் மற்றும் ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உயர்த்தப்பட்ட பானட்டில் 'SKODA' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு சிறப்பம்சங்களில் சற்றே சரிவான கூரை அமைப்பு, C-பில்லர்களில் 'SKODA' என்ற எழுத்துகள், ஏரோடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட அலாய் வீல்கள், T-வடிவ LED டெயில்லேம்ப்கள் மற்றும் பின்புற கூரை ஸ்பாய்லர் ஆகியவை யும் வழங்கப்பட்டுள்ளன. அளவீடுகளை பொறுத்தவரை, புதிய ஸ்கோடா EV ஆனது 4,171 மிமீ நீளம், 1,798 மிமீ அகலம் மற்றும் 1,581 மிமீ உயரம் கொண்டுள்ளது.  இதன் வீல்பேஸ் 2,601 மிமீ ஆகும். 

ஸ்கோடா எபிக் EV - உட்புறம், அம்சங்கள்:

உட்புறத்தை கவனித்தால், டேஷ்போர்டுடன் ஒருங்கிணைக்கப்பட்ட 13 இன்ச் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதற்குச் சற்று கீழே ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கோடா எபிக் EV-யில் 10-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, V2L மற்றும் V2V செயல்பாடுகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 7 ஏர்பேக்குகள், ADAS சூட், 360-டிகிரி கேமரா போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் நிரம்பியுள்ளன. 475 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட முன்பக்க லக்கேஜ் பகுதி ஆகியவை இதன் உட்புறத்தை மேலும் பயனுள்ளதாக்குகின்றன. வேரியண்ட்டைப் பொறுத்து பலவிதமான கேபின் தீம் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.


Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்

ஸ்கோடா எபிக் EV - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்

ஸ்கோடா எபிக் கார் மாடலானது மூன்று ட்ரிம்களிலும் (35, 40 மற்றும் 55), 38.5kWh மற்றும் 55kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 38.5kWh பேட்டரி பதிப்பானது, 116bhp ஆற்றல் மற்றும் 267Nm டார்க் வெளியீட்டுடன், 310 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. 55kWh பேட்டரி பேக்கானது, 135bhp ஆற்றல் மற்றும் 267Nm டார்க் உடன் 440 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. பெரிய பேட்டரி பேக்கை DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 25 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என ஸ்கோடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா

ஸ்கோடா எபிக் EV - விலை, போட்டியாளர்கள்

வேரியண்ட் அடிப்படிடையில் எபிக் மின்சார கார் மாடலின் விலையானது 21 லட்சத்தில் தொடங்கி 26 லட்சம் ரூபாய் வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது மஹிந்த்ரா BE 6, ஹுண்டாய் க்ரேட்டா, டாடா கர்வ், மாருதி சுசூகி இ விட்டாரா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்த்ரா XUV 7XO ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget