மேலும் அறிய

Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா

TN Cabinet Asdhav Arjuna: விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.

TN Cabinet Asdhav Arjuna: மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயன்றதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

”அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு”

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதில் சமுக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மட்டுமின்றி தவெகவினரின் விருப்பமாகவும் உள்ளது. கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதுபோக வெளியில் ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளின் முடிவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைச்சரவைய்ல் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அதுதான். இஸ்லாமிய சகோதரர்களான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தரப்பினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்கள் தரப்பில் இருந்து நல்ல சேதி வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீது கடும் தாக்கு..

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அரைநூற்றாண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் மாற்றத்திற்காக முதலமைச்சர் விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஒரு அணியை உருவாக்கி பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக எடப்பாடி எல்லா திட்டங்களையும் கடைசி வரை முன்னெடுத்துள்ளார். திமுக தனது கொள்கைகள் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளில் இருந்து விலகியுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு போட்டால் பாஜக ஆட்சி தான் நடைபெறும் என ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் தேர்தலின் போது பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் முடிந்ததும் அதையெல்லாம் மறந்து அதிமுகவுடன் சேர்ந்து ஒரு அரசை உருவாக்க முற்பட்டார்கள். 

அமைச்சரவையில் சி.வி. சண்முகம் தரப்பு?

அதனை ஏற்க மறுத்து தான் அதிமுகவிக் சி.வி. சண்முகம் தரப்பிலான அணி உருவாகியுள்ளது. தாங்கள் அதிகாரத்திற்காகவோ, பதவிகளுக்காகவோ வெளியே வரவில்லை என தெரிவித்துள்ளனர். ஸ்டாலின், உதயநிதி மற்றும் எடப்பாடி ஆகியோர் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்துவிட்டோம் என கூறினர். இந்த கடுமையான தோல்விகளுக்கு எடப்பாடி காரணம் என சாடினர். இதற்கு பாஜகவோடு சேர்ந்தது அதிருப்தியாக இருந்தாலும், திமுகவுடன் சேர்ந்தது தற்கொலைக்கு சமம் என அதிமுகவினர் கருதுகின்றனர். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக மற்றும் விஜயால் உருவாக்கப்பட்ட தவெக தொண்டர்களிடையே இயல்பாகவே நல்ல உறவு உள்ளது. அந்த வகையில் சி.வி. சண்முகம் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அவரே முடிவு செய்ர். சட்ட சிக்கல்களை அவரே எதிர்கொள்வார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அந்த பக்கமா? இந்த பக்கமா: டான்ஸ் புயல் ராகவா பார்வை எந்த பக்கம்: நாளை முடிவு?
அந்த பக்கமா? இந்த பக்கமா: டான்ஸ் புயல் ராகவா பார்வை எந்த பக்கம்: நாளை முடிவு?
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
Embed widget