டாடா சியரா vs ஹாரியர் vs கர்வ்: விலை, சிறப்பம்சங்கள், ரேஞ்ச்- எது சிறந்த EV?
பழைய நினைவுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து ஒரு பிரீமியம் லைஃப்ஸ்டைல் எஸ்.யு.வியாக சியரா EV உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள கர்வ் EV, நேற்று வெளியான சியரா EV, மற்றும் ஹாரியர் EV ஆகிய மூன்று கார்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் மற்றும் விவரங்களை இங்கே காணலாம்.
டாடா கர்வ் EV (Tata Curvv EV)
இது ஏற்கனவே சந்தையில் வெளியாகி வெற்றிநடை போடும் கூபே (Coupe) வடிவமைப்பு கொண்ட காராகும். இது 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது.
இது 150 PS மற்றும் 167 PS ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கி.மீ முதல் 585 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 17.49 லட்சம் முதல் ரூ. 21.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் EV (Tata Harrier EV)
வலிமையான நடுத்தர எஸ்.யு.வி இது. டூயல் மோட்டார் அமைப்புடன் கூடிய AWD தொழில்நுட்பத்தைப் பெறும் முதல் டாடா கார். இதில் 60 kWh முதல் 80 kWh வரையிலான பெரிய பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 - 627 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும். இதன் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 21.40 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இருக்கும்.
டாடா சியரா EV (Tata Sierra EV)
பழைய நினைவுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து ஒரு பிரீமியம் லைஃப்ஸ்டைல் எஸ்.யு.வியாக சியரா EV உருவாக்கப்பட்டுள்ளது. ஹாரியரை விட அதிக இடவசதி, தாராளமான ஹெட்ரூம் மற்றும் தனித்துவமான கிளாஸ் ரூஃப் டிசைனை இது கொண்டிருக்கும். இதிலும் 60 - 80 kWh பேட்டரி அமைப்புடன் 655 கி.மீ.க்கும் அதிகமான ரேஞ்ச் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 18.79 லட்சம் முதல் ரூ. 25.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எது சிறந்த தேர்வு?
ஸ்டைலான டிசைன் மற்றும் பட்ஜெட் விலை வேண்டுவோர் கர்வ் EV-ஐ தேர்வு செய்யலாம். ஆஃப் ரோடு பயணம் மற்றும் ஸ்போர்ட்டியான டிரைவிங் விரும்புபவர்களுக்கு ஹாரியர் EV சரியான தேர்வாக அமையும். அதேசமயம், குடும்பத்திற்கான அதிக இடவசதி, ரெட்ரோ லுக் மற்றும் பிரீமியம் சொகுசு அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சியரா EV கச்சிதமாகப் பொருந்தும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















