மேலும் அறிய

Rolls Royce electric SUV: மிருகத்தை EV மோடில் இறக்கும் ப்ரீமியம் கார் ப்ராண்ட்.. 530KM ரேஞ்ச், மூச்சு முட்டும் விலை..!

Rolls Royce electric SUV: இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல், மின்சார எஸ்யுவியை 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Rolls Royce electric SUV: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவி, 530 கிலோ மீட்டர் ரேஞ்ச் உடன், சுமார் 12 கோடி மதிப்பில் சந்தைப்படுத்தப்படலாமென தெரிகிறது.

ரோல்ஸ் ராய்ஸின் முதல் மின்சார எஸ்யுவி:

ப்ரீமியம் கார் ப்ராண்ட்களில் முக்கியமானதாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது புதிய முழுமையான மின்சார எஸ்யுவியை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.  சர்வதேச சந்தையில் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாம். இங்கிலாந்து நிறுவனத்தின் இரண்டாவது மின்சார கார் மற்றும் இரண்டாவது மின்சார எஸ்யுவி ஆனது, 2026ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள பெண்ட்லி நிறுவனத்தின் முதல் மின்சார கார் உடன் போட்டியிட உள்ளது. முன்னதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த முதல் எஸ்யுவி ஆனது கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்து. ஆனால், பல்வேறு காரணங்களால் அது தாமதமானது குறிப்பிடத்தக்கது. 

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவி டிசைன்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவியின் சோதனை கார் மாடலானது அண்மையில் ஸ்வீடனில் அடையாளம் காணப்பட்டது. கல்லினனை போன்றே கருப்பு நிறத்திலும், கூர்மையாக இருப்பதையும் சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. ஆனாலும், தனித்துவமான ஸ்டைலிங் எலிமெண்ட்களை பெற்றுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டரை போன்றே, மின்சார எஸ்யுவி ஆனது முன்புறத்தில் ஸ்ப்லிட் முகப்பு விளக்கு அமைப்பு, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், பம்பரில் பெரிய ஏர் டேம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அடையாளமாக கருதப்படும் வழக்கமான பேந்தியோன் க்ரில் டிசைனும் இந்த மின்சார எஸ்யுவியில் இடம்பெறவில்லை. 

பக்கவாட்டு தோற்றமானது எதிர்பார்த்ததை போன்றே பாக்ஸி வடிவில் உள்ளது. குறைந்த க்ரவுண்ட் க்ளியரன்ஸானது காரின் அழகை கூட்டுகிறது. ரூஃப் ரெயில்ஸும் காணப்பட்டுள்ளது. பின்புறத்தில் லேசாக வளைக்கப்பட்ட D பில்லர் இருக்க, வெர்டிகலி ஒரியண்டட்  எல்இடி டெயில் லைட்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஸ்டாப் லேம்பிங் உடன் கூடிய ரூஃப் ஸ்பாய்லரும் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவி - இன்ஜின், ரேஞ்ச் விவரம்

தற்போது விற்பனையில் உள்ள மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்களுக்கு பயன்படுத்தப்பட்ட, அதே ”ஆர்கிடெக்ட்சர் ஆஃப் லக்சரி” ப்ளாட்ஃபார்ம் தான் இந்த எஸ்யுவிக்கும் பயன்படுத்தப்படுகிறது. பவர்ட்ரெயின் தொடர்பான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், பிஎம்டபள்யு நிறுவனத்தின் புதிய மின்சார வாகன தொழில்நுட்பத்தை ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.  iX3 எஸ்யுவி கார் மாடல் மூலம் தொடங்க உள்ள ப்ராண்டின் புதிய நியூ க்ளாசே மாடல் லைன் மூலம் இந்த தொழில்நுட்பமானது அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஆர்கிடெக்ட்சர் 9 ஆண்டுகள் பழையமையானது என்பதால் பிஎம்டபள்யு தொழில்நுட்பம் ரோல்ஸ் ராய்ஸ் உடன் இணங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.அதேநேரம், ஸ்பெக்டர் மின்சார காரில் இருந்த அமைப்பை அப்படியே புதிய எஸ்யுவியில் பயன்படுத்தும் வாய்ப்பும் ரோல்ஸ் ராய்ஸுக்கு உள்ளது. 102KWh டூயல் மோட்டார் செட்-அப்பானது 659hp மற்றும் 1,075Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவி - விலை

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலை தொடர்ந்து, தனது மின்சாரமயமாக்கலை நோக்கி நிறுவனம் வேகமாக நகர தொடங்கியுள்ளது. கல்லினன் எஸ்யுவியின் இன்ஜின் எடிஷனின் விலையே 10.50 கோடியில் தொடங்கி ரூ.12.25 கோடி வரை நீள்கிறது. அதன் தாக்கத்தை கொண்ட புதிய மின்சார எஸ்யுவியின் விலையும் சுமார் ரு.12.5 கோடி வரை நிர்ணயிக்கப்படலாமென கூறப்படுகிறது. மின்சார எஸ்பெக்டரின் விலை ரூ.7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Frequently Asked Questions

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவி எப்போது சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார எஸ்யுவி 2027 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவியின் மதிப்பிடப்பட்ட ரேஞ்ச் என்ன?

இந்த மின்சார எஸ்யுவி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 530 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவியின் தோராயமான விலை என்னவாக இருக்கும்?

இந்த புதிய மின்சார எஸ்யுவியின் விலை சுமார் ரூ.12.5 கோடி வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார எஸ்யுவியின் வடிவமைப்பு எப்படி இருக்கும்?

சோதனை மாடல் புகைப்படங்களின்படி, இது கல்லினனைப் போன்ற கருப்பு நிறத்திலும், கூர்மையானதாகவும், முன்புறத்தில் ஸ்ப்லிட் முகப்பு விளக்கு அமைப்புடனும் இருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget