ரூபாய் 1.50 லட்சம்தான் பட்ஜெட்.. River Indie இ ஸ்கூட்டரில் மைலேஜ், தரம் எப்படி?
River Indie இ ஸ்கூட்டரின் தரம், மைலேஜ், விலை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இ ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நிறுவனங்களும் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது.
River Indie விலை என்ன?
இந்த நிலையில், ரிவர் இண்டி நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் தற்போது சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.
River Indie இ ஸ்கூட்டரின் வித்தியாசமான தோற்றத்தை கொண்டது. இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. Indie Standard என்பது அதன் பெயர். இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 55 ஆயிரத்து 526 ஆகும்.
மைலேஜ்:
ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. நகர்ப்புறங்களில் செல்வதற்கு மிகவும் உகந்த வாகனமாக இந்த River Indie உள்ளது. இதன் எடை 143 கிலோ ஆகும்.
வசதிகள்:
இந்த இ ஸ்கூட்டரில் 4.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த River Indie இ ஸ்கூட்டர் 5 வண்ணங்களில் உள்ளது. இதில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டள்ளது. இதை ஒரு எஸ்யூவி ஸ்கூட்டர் என்று அழைக்கின்ற்னர்.
சிறப்புகள்:
இந்த River Indie இ ஸ்கூட்டரின் முக்கிய அம்சமாக கருதப்படுவது அதன் தோற்றமே ஆகும். இதன் முகப்பு பக்கம் எந்த வாகனத்திலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
கால் வைப்பதற்கு ஏற்றவாறு இதன் முகப்பு பக்கம் உள்ளது. 43 லிட்டர் பொருட்கள் வைப்பதற்கான டிக்கி வசதி கொண்டது. இந்த River Indie இ ஸ்கூட்டர் Ather 450X, பஜாஜ் Chetak, ஓலா S1 Pro மற்றும் TVS iQube மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உள்ளது.
நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்துக்கு இடையில் இந்த ரிவர் இண்டி இ ஸ்கூட்டரை ஓட்டுவது மிகவும் எளிதானதாக இருக்கிறது. இந்த இ ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது. 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. 40 கிலோமீட்டர் வேகத்தை 40 நொடிகளில் எட்டிவிடும். இதன் ரியல் ரேஞ்ச் 132 கிலோ மீட்டர் என்று கூறப்படுகிறது.
வாரண்டி:
எகோ, ரைட், ரஷ் ஆகிய 3 மோட்களில் இந்த வாகனம் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக் வசதி உள்ளது. டிஸ்க் வசதி உள்ளது. காலிபர் ப்ரண்ட் 3 பிஸ்டன் வசதி கொண்டது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் வித் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் வசதி கொண்டது. பேட்டரி 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொண்டது. 3 வருடம் மோட்டார் வாரண்டி உள்ளது.
6 இன்ச் டிஜிட்டல் எல்சிடி ஸ்கிரீன் வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி கொண்டது. கால், எஸ்எம்எஸ் அலார்ட் வசதி கொண்டது. மணி பார்க்கும் வசதியும் உள்ளது. செல்போன் சார்ஜிங் வசதியும் கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. லைவ் லொகேஷன் வசதி கொண்டது. டூயல் லைட, பூட் லைட் வசதி உள்ளது.





















