மேலும் அறிய

Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?

Mahindra Bolero Neo Plus Drawbacks: நாட்டின் மலிவான 9 சீட்டர் SUV ஆன மஹிந்த்ரா பொலேரோ நியோ ப்ளஸ் கார் மாடலில் உள்ள குறைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra Bolero Neo Plus Drawbacks: மஹிந்த்ரா பொலேரோ நியோ ப்ளஸ் கார் மாடலின் சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்த்ரா பொலேரோ நியோ ப்ளஸ்:

பயனர்களின் தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஏற்ப வாங்கும் கார்களின் மாடல்கள் மாறுபடுகின்றன. ஒருவேளை பெரிய குடும்பம், நண்பர்கள் கூட்டமாக வெளியூர் செல்வது, தினசரி பயன்பாட்டில் அதிக நபர்கள் பயணிப்பது போன்றவை உங்களது தேவையாக இருந்தால், வழக்கமான 5 சீட்டர்கள் போதுமானதாக இருக்காது. இத்தகைய தேவைகளுக்கு ஏற்றதாக நாட்டிலேயே மலிவு விலையில் கிடைக்கும் 9 சீட்டர் மாடலான மஹிந்த்ராவின் பொலேரோ நியோ ப்ளஸ் விளங்குகிறது. இதன் எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.11.39 லட்சத்தில் தொடங்கி ரூ.12.49 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், இதில் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் மஹிந்த்ரா பொலேரோ நியோ ப்ளஸ் காரில் உள்ள குறைகள், யாருக்கு இந்த கார் பொருந்தாது மற்றும் இதற்கான மாற்று ஆப்ஷன்களாக சந்தையில் கிடைக்கும் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

பொலேரோ நியோ ப்ளஸ் - முக்கிய குறைபாடுகள்

1. கடைசி வரிசை எதிரெதிர் இருக்கைகள்

கரடுமுரடான டிசைனுடன் இரண்டாவது வரிசை இருக்கைகள் விசாலமான இடவசதியை கொண்டிருந்தாலும், கடைசி வரிசை இருக்கைகள் போதிய இடவசதி இல்லாமலும், எதிரெதிரே முகத்தை பார்த்தபடி பயனர்கள் அமையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சாலையை பார்த்தபடி இருக்கும் இருக்கைகளுடன் ஒப்பிடுகையில் இந்த பக்கவாட்டு இருக்கைகள் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்ததாக இல்லை.

2. அடிப்படையான கேபின் வசதி

நவீன எஸ்யுவி மற்றும் எம்பிவிக்களுடன் ஒப்பிட்டால் பொலேரோ நியோ ப்ளஸின் கேபினானது பழங்காலத்தை சேர்ந்ததை போன்ற எண்ணத்தை வழங்குகிறது. குறைந்த ப்ரீமியம் அம்சங்களுடன் அதிகளவில் கடினமான ப்ளாஸ்டிக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.  குறைவான அம்சங்கள்

வேரியண்ட் அடிப்படையில், இன்றைய காலகட்டத்தில் பயனர்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த காரில் இடம்பெறவில்லை. குறிப்பாக ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வெண்டிலேடட் இருக்கைகள், ADAS, ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவை இல்லை.

4. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி இல்லை

6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.  இதனால் நகர்ப்புற ட்ரைவிங் அனுபவம் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

5. பயண தரம்

லேடர் ஃப்ரேம் மீது இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளதால் குறைவான எடையை கொண்டு பயணிக்கும்போது, தூக்கிப்போடுவதை போன்ற உணர்வை நீங்கள் பெறலாம். சஸ்பென்ஷனின் தரம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை.

6. எரிபொருள் செயல்திறன்

லிட்டருக்கு 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என கூறப்பட்டாலும், நிஜ உலக பயன்பாட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 11 முதல் 14 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்

பொலேரோ நியோ ப்ளஸ் - யாருக்கு செட் ஆகாது?

  • மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே உள்ளதால், நகர்ப்புறத்தில் எளிதான பயண அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்காது
  • சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ் மற்றும் ப்ரீமியம் அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற தேர்வாக பொலேரோ நியோ ப்ளஸ் இருக்காது
  • 9 இருக்கைகளையும் நிரப்பி அடிக்கடி நீண்டதூரம் பயணிப்பவர்களாக இருந்தால், நிச்சயம் இந்த காரின் இருக்கை வசதி சலிப்பை ஏற்படுத்தக்கூடும்
  • பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்
  • வலுவான எரிபொருள் செயல்திறனை எதிர்பார்ப்பவர்களுக்கு இது பொருந்தாது
  • சுகமான பயண அனுபவத்திற்கு மாற்றாக ஒரு ட்ரக்கில் இருப்பதை போன்றும், அவ்வப்போது தூக்கி போடுவதை போன்றும் பயன அனுபவத்தை பெறக்கூடும்
  • வழக்கமாக 4 முதல் 5 பேருடன் தான் பெரும்பாலும் பயணிப்பவராக இருந்தால், 9 சீட்டருக்கு பதிலாக 5 அல்லது 7 சீட்டர் எஸ்யுவிக்களை தாராளமாக பரிசீலிக்கலாம்
  • ADAS போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும்  பொலேரோ நியோ ப்ளஸ் ஒத்துவராது


Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?

பொலேரோ நியோ ப்ளஸ் - மற்று ஆப்ஷன்கள்

மஹிந்த்ராவின் பொலேரோ நியோ ப்ளஸ்  உடன் ஒப்பிடுகையில் அதன் குறைபாடுகள் அடிப்படையில் இந்திய சந்தையில் பல மாற்றும் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வசதி மற்றும் குடும்ப பயணம் அடிப்படையில் கியா காரென்ஸ் மாடலும், எரிபொருள் செயல்திறன் அடிப்படையில் மாருதி எர்டிகா அல்லது டொயோட்டா ரூமியன் மாடலும், விசாலமான 7 சீட்டர் அடிப்படையில் மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக் மாடலும், நவீன அம்சங்கள் அடிப்படையில் ஹுண்டாய் அல்கசார் அல்லது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் மாடல்களும் பிரதான மாற்று ஆப்ஷன்களாக உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ ரேஞ்ச், 1193 HP! அறிமுகமான புதிய இவி காரின் மைண்ட்ப்ளோயிங் அம்சங்கள்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ ரேஞ்ச், 1193 HP! அறிமுகமான புதிய இவி காரின் மைண்ட்ப்ளோயிங் அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget