மேலும் அறிய

Renault Duster: எவ்ளோ அடிச்சாலும் கெத்தா நிப்பேன்..! க்ரேட்டாவுக்கே மூணு தான், 5 ஸ்டாரை வாங்கி மிரட்டும் டஸ்டர் -

Renault Duster Safety Rating: இந்திய மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மேம்படுத்தப்பட்டு அறிமுகமான ரெனால்ட் டஸ்டர், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.

Renault Duster Safety Rating: ரெனால்ட் டஸ்டர் கார் மாடலில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

க்ராஷ் டெஸ்டில் அசத்திய ரெனால்ட் டஸ்டர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகப்படியான போட்டி நிலவும் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில், நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த காரானது பாரத் புதிய கார்  மதிப்பீடு திட்டத்தின் கீழ் பாதுகபபு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவில் பெரியவர்களுக்கான பரிசோதனையில் 32 புள்ளிகளுக்கு 30.49 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. மிட்சைஸ் எஸ்யுவி பிரிவு விற்பனையில் அசத்தி வரும் ஹுண்டாயின் க்ரேட்டா மாடலே, சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனை

காரை மோதலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்பக்க தாக்கமானது 16 புள்ளிகளுக்கு 14.49 புள்ளிகளை பெற்றுள்ளது. இதோடு ஓட்டுனரின் தலை, கழுத்து, இடுப்பு மற்றும் தொடைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் நல்ல நிலையையும் புதிய ரெனால்ட் டஸ்டர்  உறுதி செய்துள்ளது. அதேநேரம், ஓட்டுனரின் மார்பு மற்றும் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைபட்ட பகுதியான கால் எலும்புப் பகுதிக்கு பாதுகாப்பு நிலை போதுமானது என்ற நிலையை மட்டுமே எட்டியுள்ளது. ஓட்டுனர் அல்லாத முன் இருக்கை பயணிக்கு  மார்பு மற்றும் கீழ்-கால் பகுதிகள் உட்பட வழங்கப்படும் பாதுகாப்பிற்காக, டஸ்டர் ஒட்டுமொத்தமாக 'நல்ல' மதிப்பீட்டைப் பெற்றது. நகரும்போது ஏற்பட்ட தாக்கத்திலும் பக்கவாட்டிற்கான பாதுகாப்பில் 16-க்கு 16 புள்ளிகளை பெற்றுள்ளது. பக்கவாட்டில் கம்பம் மீது மோதினால் பாதுகாப்பு நிலை 'பரவாயில்லை' என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.


Renault Duster: எவ்ளோ அடிச்சாலும் கெத்தா நிப்பேன்..! க்ரேட்டாவுக்கே மூணு தான், 5 ஸ்டாரை வாங்கி மிரட்டும் டஸ்டர் -

குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை

ரெனால்ட் டஸ்டரின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையானது,  18 மாத மற்றும் 3 வயது குழந்தைகளைப் போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு பிரிவுகளிலும், முன்பக்க மற்றும் பக்கவாட்டுப் பாதுகாப்பு டைனமிக் மதிப்பெண்கள் உட்
பட, டஸ்டர் அதிகபட்சமாக 24 புள்ளிகளைப் பெற்றது. இரண்டாவது வரிசையின் வெளிப்புற இருக்கைகளில் மட்டுமே ISOFIX ஆங்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். டஸ்டரின் குழந்தை பாதுகாப்பு அமைப்பு (CRS) சாத்தியமான அதிகபட்ச மதிப்பெண்ணான 12 புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும், 13 புள்ளிகளுக்கு 9 என்ற வாகன மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன், டஸ்டரின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பெண் 49க்கு 45 புள்ளிகளாக உள்ளது.

Renault Duster: எவ்ளோ அடிச்சாலும் கெத்தா நிப்பேன்..! க்ரேட்டாவுக்கே மூணு தான், 5 ஸ்டாரை வாங்கி மிரட்டும் டஸ்டர் -

ரெனால்ட் டஸ்டர் பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரின் ஆறு வேரியண்ட்களும் பலதரப்பட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஹில் டிஸ்செண்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்டட் சீட்பெல்ட்ஸ், ISOFIX இருக்கை புள்ளிகள் ஆகியவை அடங்கும். அதேநேரம், டாப் ஸ்பெக் ஐகானிக் வேரியண்டானது, ADAS தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ எமர்ஜென்சி ப்ரேக்கிங் மூலம் கொலிசன் டிடெக்‌ஷன், லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் ஆகியவற்றை அணுக முடியும்.


Renault Duster: எவ்ளோ அடிச்சாலும் கெத்தா நிப்பேன்..! க்ரேட்டாவுக்கே மூணு தான், 5 ஸ்டாரை வாங்கி மிரட்டும் டஸ்டர் -

ரெனால்ட் டஸ்டரின் கார் மாடலின் விலையானது 10 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. டூயல் டோன் வண்ண ஆப்ஷன்களுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டி இருக்கும். உள்நாட்டு சந்தையில் இந்த மிட்-சைஸ் எஸ்யுவி காரானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, டாடா சியாரா மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget