PURE EV ETrance Neo: 150 கிலோமீட்டர் மைலேஜ்.. PURE EV ETrance Neo விலை எப்படி? தரம் எப்படி?
ப்யூர் இவி நிறுவனத்தின் PURE EV ETrance Neo மின்சார ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் தங்களது இ ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரித்து வருகிறது. அதேசமயம், இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் இ ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றனர்.
PURE EV ETrance Neo:
அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள பிரபலமான மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் PURE EV நிறுவனம். இந்த நிறுவனத்தின் PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே காணலாம்.
இந்த PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 81 ஆயிரத்து 21 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851 ஆகும்.
1. ETrance Neo SX - ரூபாய் 81 ஆயிரத்து 021
2. ETrance Neo Standard - ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 322
3. ETrance Neo Plus - ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851
ETrance Neo SX:
இந்த ETrance Neo SX இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 81 ஆயிரத்து 21 ஆகும். இதில் 1.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 101 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 47 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சாம்பல் நிறத்தில் இந்த வாகனம் இருக்கிறது. ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. 100 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது.
ETrance Neo Standard:
இந்த ETrance Neo Standard இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 322. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லலாம். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இ ஸ்கூட்டரில் செல்லலாம். 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எகோ, ட்ரைவ் மற்றும் ஸ்போர்ட் மோடில் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதி காட்டும் திறன் கொண்டது. 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. மஞ்சள், சாம்பல், கருப்பு, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டது. 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
ETrance Neo Plus:
இந்த ETrance Neo Plus இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 851 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, ட்ரைவ், ஸ்போர்ட் மோட் கொண்டவை. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் வசதி காட்டும் திறன் கொண்டது. சிவப்பு நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.
இந்த இ ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் வரை ஆகிறது. 86 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதனால், பெண்களும், முதியவர்களும் எளிதாக கையாளலாம். 4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதி கொண்டது. எல்இடி முகப்பு விளக்குகள் கொண்டது. இந்த ஸ்கூட்டர் சீனாவின் தயாரிப்பு ஆகும். ஓலா, ஏதருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்த இ ஸ்கூட்டருக்கு 3.5 ஸ்டார் பயனாளர்கள் வழங்கியுள்ளனர்.





















